July 25, 2016

“கறுப்பு ஜூலையை” மறந்து விட்டு கபாலியை கொண்டாடும் தமிழன் : ஆறாத ரணம் கொண்ட நாளிது !!!!

குட்டிமணி என்ற பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறே மறைக்கப்பட்டுள்ளது. உண்மையில் குட்டிமணி என்றொருவர் இந்த உலகில் வாழ்ந்து மறைந்துள்ளார். அதுவும் கடந்த இருபதாம் நூற்றாண்டில். அதுவும் கூப்பிட்டால் கூட கேட்கும் தூரத்தில். தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக சுமார் ஐந்து இலட்சம்  மக்கள்  கொன்றொழிக்கப்பட்ட  அதே ஈழத்தில்.


செல்வராசா யோகச்சந்திரன் என்பதே அவரது இயற்பெயர்.  தமிழர்களுக்காக அரசியல் ரீதியாக போராடிய  தந்தை செல்வாவிற்குப் பின்னால்  தமிழ்இளைஞர்கள் திரண்டனர். அரசியல் ரீதியாக தீர்வு கிடைக்கவில்லை. அரசியல் ரீதியாக போராடியவர்களை    ஆயுதம் கொண்டு சிங்கள அரசு ஒடுக்கியது.  அதனை கண்டு வெகுண்டெழுந்த இளைஞர்களில் முதன்மையானவர்  முதன்மையானவர் குட்டிமணி . தனித்தனி  அமைப்புகளாக செயற்பட்டுகொண்டு இருந்தாலும் தேசியத்தலைவர்  மேதகு  பிரபாகரன்  அவர்களுக்கு  நல்ல நண்பராவும் விளங்கியவர் குட்டிமணி.

வழக்கம்போலவே இவர்களை தீவிரிவாதிகள் கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைத்து இப்போராட்டத்தை முடக்குவதுதான் சிங்களத்தின் நோக்கமும் குறிக்கோளும். அதே போலவே குட்டிமணியையும் அவரது நண்பர் தங்கதுரையையும் கைது செய்து பலாலி சிறையிலடைத்தனர். ஆனால் இவர்களோ அங்கிருந்து தப்பித்தனர். தவறுதலாக தங்கதுரைக்கு காலில் அடிபடவே குட்டிமணி தங்கதுரையை தூக்கிக் கொண்டு கிட்டதட்ட பத்து கி.மீ ஓடி இவரும் தப்பித்து தங்கதுரையையும் காப்பாற்றியுள்ளார். இந்த வரலாற்று நிகழ்ச்சியெல்லாம் இன்னமும் பார்த்து வியந்து நிற்பவர்கள் பலருண்டு. இவரது உடற்பலத்திற்கு இதை எடுத்துக்காட்டாகவே சொல்வார்கள்.

அப்போதை காலகட்டத்தில் தந்தை செல்வாவால் நிறுவப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (Tamil United Liberation Front – TULF) என்ற அரசியல் இயக்கத்தின் வட்டுக்கோட்டை பிரதிநிதியான திருநாவுக்கரசு 1982-ல் இறந்தபோது அந்த இடத்திற்கு குட்டிமணியை நிறுத்தினர். அந்த நேரத்தில் அவர் சிறையிலிருக்கவே அவரை பதவியேற்றுக்கொள்ள சிங்கள சிறை அதிகாரி மறுத்துவிட்டார். ஏனென்றால் அந்தத்தருணம் அவரொரு தூக்கு தண்டனைக் கைதியாக இருந்தார் ஒருவருடமாக.

இவருக்கு தூக்குதண்டனை வழங்கும் போது நீதிபதி அவர்கள் அவரது கடைசி ஆசை என்னவென்று கேட்டபோது, குட்டிமணி சொன்ன பதில் அவர்களை உருட்டிப்போட்டது. உலகத்தில் எந்தவொரு தலைவனும் சொல்லியிருக்க முடியாத பதில். சாமானியனாக இருந்திருந்தால் குடும்பத்திற்காக சொல்லியிருப்பான். ஆனால் இவரோஎன்று கூறினார். இவரது பதிலைக்கேட்டு அந்த நீதிமன்றத்திலிருந்த அத்துனை பேருக்கும் புரிந்திருக்கும் தமிழர்களுக்கான தனி ஈழம் எவ்வளவு முக்கியமானது என்று. அதன் பிறகே அவர் கொழும்பில் உள்ள வெலிக்கட சிறைக்கு தூக்குதண்டனையை நிறைவேற்ற மாற்றப்படுகிறார். அங்கேதான் அவருக்கான தூக்கு மேடை தயாரானது.



சிங்கள பேரினவாத 1983 ஆம் வருடம் சூலை மாதம் 24-ம் நாள் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்க அரசியல்வாதிகளால் சிங்களவர்கள் தூண்டப்பட்டு கொழும்பு நகரம் முழுவதும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. கத்திகளோடும் கம்பிகளோடும் தடிகளோடும் தீப்பந்தங்களோகும் கூட்டம் கூட்டமாக நகரம் முழுவதுமுள்ள அத்துனை தமிழர் சார்ந்த வீடுகளும் கடைகளும் எரியூட்டப்பட்டன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தாண்டவமாடின. தமிழ்ப் பிள்ளைகள் தீக்களில் தூக்கி வீசப்பட்டன. கற்பு பாழாக்கப்பட்டன. ஆண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதிகளில் ஓடவிடப்பட்டனர். இவையெல்லாம் சரியான பழிவாங்கலாகவே சிங்களர்கள் நினைத்தனர். ஏனென்றால் அப்போது தான் விடுதலைப்புலிகளால் இராணுவ வாகனம் மீது மிகப்பெரிய  தாக்குதல்  நடத்தப்பட்டிருந்தது.

“கருப்பு சூலை” என்று தமிழர்கள் வரலாற்றில் சொல்லப்படும் இந்தக் கலவரத்தின் இரண்டாம் நாள்தான் கலவரம் வெலிக்கட சிறைக்குள்ளும் பரவ பெருவாரியான சிங்களக் கைதிகள் இருந்த அந்தச்சிறையில் தமிழர் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் 24பேரும் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் குட்டிமணியும் ஒருவர்.

சிறைக்காப்பாளரே இந்த மோதலைத் தூண்டிவிட்டு தமிழர்களை அழிக்கவும் வழிவகைசெய்யப்பட்டது. எந்தக் கண்கள் பிறக்கப்போகும் தமிழீழத்தை பார்க்க விரும்பினவோ அதே கண்கள் இரும்பு கம்பிகளால் தோண்டி எடுக்கப்பட்டன. உயிரோடு இருக்கும் போதே. உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு அனைத்தும் சிறையினுள்ளே இருந்த புத்த சிலைக்கு முன் படைக்கப்பட்டன.

மறைக்கப்பட்ட இந்த வரலாற்றை தயவுசெய்து மற்றவர்களிடம் எடுத்துச்சொல்லுங்கள்.

ஒரு குட்டிமணியை அவர்கள் அழித்திருக்கலாம். அவருடைய பெயரைத்தாங்கி இன்னும்  இன்னும் ஓராயிரம் குட்டிமணிகள் வருவார்கள். மலரவிருக்கும் தமிழீழத்தைப் பார்ப்பார்கள்.

வெலிக்கடைஇந்த  இன அழிப்பு கலவரத்தில்  ஓர் உன்னதமான போராட்ட வீரன் கொடூரமாக கொல்லப்பட்டதுடன்  எண்ணிலடங்காத  தமிழ்மக்கள் கொல்லப்பட்டும்  காணாமலும் போயினர்.  தப்பிப்பிழைத்து கொழும்பில்  வாழ்ந்த  தமிழர்கள் அனைவரும் போட்டிருந்த  உடையுடன் மட்டும் யாழ்ப்பானத்திட்கு விரட்டியடிக்கப்பட்டனர். இந்நிகழ்வு உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.

இன்றைய  நாள்  தமிழர்கள்  வாழ் நாளில் என்றும் மறக்க  முடியாத  நாளாக  இருக்கின்றது.





No comments:

Post a Comment