இலங்கை தமிழ் அகதிகள் 35 பேர் நேற்று இந்தியாவிலிருந்து நாடுதிரும்பியுள்ளனர். 16 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரே தமது சுய விருப்பின் பேரில் நாடு திரும்பியுள்ளனர். குறித்த அகதிகளுக்கான பயண ஏற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது. இவர்களில் 11 ஆண்களும் 24 பெண்களும் அடங்குகின்றனர்.
அவர்களில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மதுரையிலிருந்து மிஹின்லங்கா விமான சேவையூடாக நேற்று மு.ப. 9.15 மணியளவிலும் ஏனைய 8 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் சென்னையிலிருந்து மிஹின்லங்கா விமானசேவையூடாக பகல் 12.05 மணியளவிலும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
நாடு திரும்பியுள்ள அகதிகளுக்கான மீள்சமூக ஒருங்கிணைப்புக்கான ஏற்பாடுகளையும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது. குறித்த அகதிகள் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
இது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவிக்கையில், இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை சுயவிருப்பின் பேரில் கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள் ளது.
2011 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆயிரத்து 835 இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளனர். மேலும் இந்தியாவிலுள்ள 109 முகாம்களில் 64 ஆயிரம் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். அவர்களில் ஏராளமானோர் நாடு திரும்புவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
நாடு திரும்பும் அகதிகளுக்கான சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சர் சுவாமிநாதன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் பலனாகவே அதிகளவான அகதிகள் நாடு திரும்புவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளனர். மேலும் நாடு திரும்பும் அகதிகள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு இலட்சம் ரூபா வரையிலான உதவு தொகையும் வழங்கப்படுகிறது.
அத்துடன் அவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு உலர் உணவுப் பொருட் களை வழங்குவதற்கும் அரசாங்கம் நட வடிக்கை எடுத்துள்ளது. மேலும் நிர்மா ணிக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் நாடு திரும்பும் அகதிகளுக்கு வீடு வழங்கு வதற்கான நடவடிக்கையும் மேற்கொள் ளப்படும் எனவும் அவர் மேலும் தெரி வித்தார்.

No comments:
Post a Comment