July 1, 2016

கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் இளைஞா் யுவதிகள் வேலையின்றி உள்ளனா் மாவட்ட அரச அதிபா்!


கிளிநொச்சியில்  இருபதாயிரம்  இளைஞர் ,யுவதிகள்  வேலைவாய்ப்பு  அற்ற  நிலையில்    இருப்பதாக  மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம்  தெரிவித்துள்ளார் .


மனிதவலு மற்றும் வேலைவாயப்பு திணைக்களத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் 30-06-2016 (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால் குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


அதனை தொடர்ந்து மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது, திணைக்களத்தில் பணி புரிவதற்கான நியமன கடிதமும், அலுவலக உபகரணங்களும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில்  கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்   கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கல்வியை தொடர முடியாமல் பாதிக்கப்பட்ட   இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்று கொடுத்து, அவர்களது குடும்ப வருமானத்திற்கு உதவ வேண்டும் என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சரிடம்  வேண்டுகோள் விடுத்தார்  அத்துடன்   யுத்தம் காரணமாக கல்வியை தொடர முடியாத நிலையில் அவர்கள் சிறந்த வேலைவாய்ப்புக்களை பெற்று கொள்ள முடியாதுள்ளனர். இதன் காரணமாக குடும்ப வருமானம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.என   தெரிவித்தார்

அவர் தொடர்ந்து  தெரிவிக்கையில்   கிளிநொச்சியில் இரண்டு  ,மூன்று  தொழிற் சாலைகள்  சிறந்த  முறையில்  நடைபெற்று  வருகிறது   இதில்  இரண்டாயிரம்  இளைஞர் யுவதிகள்  வேலை  செய்து   வருகிறார்கள்  அவ்வாறு  கிளிநொச்சிக்கு  வர  இருக்கும்   தொழிற் சாலையில்  எமது  இளைஞர் யுவதிகளிற்கு  வேலைவாய்ப்பினை  பெற்றுக்  கொடுக்க  ஆவனை செய்து  தருமாறும்  கேட்டுக்  கொண்டார்

இன்   நிகழ்விற்கு  தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர், அமைச்சின் செயலாளர், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அதிகாரிகள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிடட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment