முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுவை உச்ச நீதிமன்றம் இன்றுநிராகரித்துள்ளது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குகளுக்குஎதிராகவே மனித உரிமைகள் மீறல் மனு ஒன்றை பசில் ராஜபக்ச தாக்கல் செய்துள்ளார்.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் மூவர் அடங்கிய குழுவினால் இந்த மனுசட்ட அடிப்படை இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பணமோசடி சட்டத்தின் கீழ், நிதி மோசடி விசாரணைப் பிரிவு கம்பஹா, பூகொடை,மாத்தறை மற்றும் கடுவலை நீதவான் மூலம் பீ(B) அறிக்கைகள் தாக்கல் செய்து தன்னைகைது செய்ய முயற்சித்துள்ளார்கள் என அந்த அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுவில் பசில் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், இந்த பீ(B) அறிக்கைகள் தவறாக தாக்கல் செய்யப்பட்டவை என பசில்குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் இரு வழக்குகள் நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ச இரண்டுவழக்குகளிலும் இருந்து பிணையில் விடுதலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment