முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று அழைக்கப்படும்
பிள்ளையான் உள்ளிட்ட நான்கு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பிள்ளையான் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மட்டக்களப்பு நீதவான் கனேசராஜா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான 'பிரதீப் மாஸ்டர்' என அழைக்கப்படும் எட்வின் சில்வா, கிருஸ்ணானந்தராஜா, 'கஜன் மாமா' எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோர் குறித்த படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு பிள்ளையான், கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment