June 13, 2016

திருச்சி தடுப்பு முகாமில் மேலும் ஐந்து அகதிகள் பட்டினிப்போராட்டம்!

திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளில் நான்கு பேர் கடந்த 08.06.2016 தொடக்கம் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பட்டினிப்போராட்டம் ஆரம்பித்து ஐந்து நாட்களாக தொடர்ந்த நிலையில் நேற்றைய தினம் (12.06.2016) தடுப்பு முகாமில் உள்ள அகதிகளில் நான்கு
பேரை விடுதலை செய்வதாக Q பிரிவு அதிகாரிகள் வாக்குறுதியளித்த காரணத்தினால் பட்டினிப்போராட்டத்தினை தற்காலிகமாக முடித்துக்கொண்டனர்.
மேலும் இவர்கள் உட்பட ஆறு பேர் மீது கூட்டுச் சதியில் (120B) ஈடுபட்டதாக வழக்கு சுமத்தப்பட்ட நிலையில் பட்டினிப்போராட்டம் நடத்தியவர்களை விடுத்து மற்றைய இருவரை மாத்திரமே விடுதலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அகதிகள் தெரிவித்தனர்.
அத்துடன் தடுப்பு முகாமில் எட்டு வருடங்களாகவும் ஏழு வருடங்களாகவும் இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அகதிகள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இருபது அகதிகளை தடுத்து வைத்துள்ள நிலையில் ஐந்து மாதங்களின் பின்னர் நான்கு பேரை மட்டும் விடுதலை செய்திருப்பது அனைவருக்கும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும்,இதனால் இன்று முதல் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து ஈழ அகதிகள் சாகும் வரை பட்டினிப்போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment