கடற்படையின் விசேட சுழியோடி பிரிவினர் நிலாவரைக் கிணற்றை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலாவரைக் கிணறானது பல ஆண்டு காலமாக சுத்திகரிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
இதனால் அதனுள் பல ஆண்டுகாலமாக பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் சேர்ந்தே காணப்பட்டது.
கடற்படை உயரதிகாரி ஒருவர் தலைமையிலான விசேட ஆழ்கடல் சுழியோடிப் படைப் பிரிவினர் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுத்திகரிப்புப் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அவர்கள் நேரடியாக பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சுற்று மதிலின் ஒரு சிறிய பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தக் காட்சிகளைக் காண அப்பகுதியில் ஏராளமான பொதுமக்களும் திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரும் தற்கொலை செய்த ஒருவரின் சடலத்தை குறித்த கடற்படைச் சுழியோடிகள் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment