June 22, 2016

காணி ஆக்கிரமிப்பில் கூட்டமைப்பின் எம்.பி?

திருட்டுத்தனமாக காட்டுமரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் அகப்பட்டுக்கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது தனது மகனின் பேரில் அரச காணியை ஆக்கிரமிக்க மேற்கொண்டுள்ள முயற்சி அம்பலமாகியுள்ளது.


தனது மகன் பெயரில் துணுக்காய் பிரதேசத்தின் கரும்புள்ளியன் கிராமத்தில் இவ்வாறு பத்து ஏக்கர் காணியைச் சுருட்ட அவர் மேற்கொண்டுள்ள முயற்சி அம்பலமாகியுள்ளது.

விவசாயப்பண்ணை அமைக்கவென கூறி அரச காணிகளை அவர் சுவீகரிக்க முற்பட்டுள்ளதாகவும் அரச அங்கீகாரத்திற்காக அவர் தற்போது காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிப்பதற்கு ஒரு துண்டு காணி கூட இன்றி அல்லாடி வருகின்றன.

தமக்கான வீடமைப்பு திட்டங்களை பெற ஏதுவாக சிறுதுண்டு காணியினையாவது தருமாறு அவர்கள் அரசிடம் தொடர்ந்தும் கோரி வருகின்ற போதும் அரசு அதனை கண்டுகொள்ளாதிருந்தே வந்துள்ளது.

அதே போன்றே விடுதலைப்புலிகளால் முன்னைய காலங்களில் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளை கூட அரசு பறிமுதல் செய்தும் வருகின்றது.

இந்நிலையில் விவசாயப்பண்ணை அமைக்கவென பத்து ஏக்கர் நிலத்தை ரணிலுடனான செல்வாக்கைப் பயன்படுத்தி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வளைத்து போட்டியிருப்பதாகத் தெரியவருகின்றது.

இதனை விட வேறு பல அரச காணிகளைக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுருட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் குறித்த காணிகள் தொடர்பிலான சான்றாதாரங்கள் ஊடகங்களிற்கு கிட்டியிருக்கவில்லை.

ஏற்கவே நாடாளுமன்ற உறுப்பினர் கணவர்திருட்டு மரம் வெட்டிக்கொண்டிருந்த போது அகப்பட்டிருந்த போதும் பெருமளவு பணத்தை அள்ளி வீசி தப்பித்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களிறகென ஒதுக்கப்பட்ட வரிச்சலுகை வாகன அனுமதியை பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்தியே மரக்கொள்ளை நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment