பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது உலங்கு வானூர்தி ஒன்றின் ஊடாக மலர் தூவப்பட்டுள்ளது.
இரத்மலானையில் அமைந்துள்ள வீட்டிலிருந்து நேற்று முன்தினம் நல்லடக்கத்திற்காக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்ட போது உலங்கு வானூர்தி ஊடாக மலர் தூவப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களினால் அண்மையில் மஹர நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல போதைப் பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான சுதேஸ் அசாங்க எனப்படும் லன்சியா என்பவரின் இறுதிக் கிரியைகளின் போது தனியார் உலங்கு வானூர்தி மூலம் மலர் தூவப்பட்டுள்ளது.
ஞானேந்திர மாவத்தை, தெலவல சந்தி, எயார்போர்ட் சந்தி உள்ளிட்ட இடங்களில் வானிலிருந்து மலர் தூவப்பட்டது.
மேலும் வீடு முதல் மயானம் வரையில் பாரியளவில் சோடனைகள் செய்யப்பட்டிருந்தன.
இறுதிக் கிரியைகளின் போது பெரும் எண்ணிக்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் பங்கேற்றிருந்தனர் எனவும் இதனால் பிரதேச மக்கள் பீதியடைந்தனர் எனவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment