கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற தீ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சுமார் 20 மணித்தியாலங்கள் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை விரைவாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெடி பொருட்கள் விழுந்துள்ள நிலையில் அவை குறித்து விஷேட கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இராணுவத்தினரை பயன்படுத்தி குறித்த பகுதியிலுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment