மது பாவித்து விட்டு வாகணமோட்டும் நபர்களினால் பல விபத்துக்கள் ஏற்படுவதுவடன், பலரது சாவுக்கும் இவர்களே காரணமாகி விடுகின்றார்கள்.
அண்மையில் கனடாவை உலுக்கியெடுத்த இவ்வாறானதொரு சம்பவத்தில் ஒரு தம்பதியினர் தமது மூன்று பிள்ளைகளையும் பேரனையும் இழந்த கொடூரம் இடம்பெற்றது.
கனடாவிலுள்ள தமிழர்களில் பலருக்கு மதுபாவித்து விட்டு வாகணமோட்டுதல் குற்றச் செயல் என்பது தெரியாது.
கனடாவிலுள்ள தமிழர்களில் பலருக்கு மதுபாவித்து விட்டு வாகணமோட்டுதல் குற்றச் செயல் என்பது தெரியாது.
பொலிசார் கைது செய்து சிறைக்குள் அடைக்கும் போது அழ ஆரம்பிக்கும் இவர்கள் தங்களின் சுயதரவில் தங்களைக் குற்றவாளிகள் எனப் பொலிசார் போடும் போது தாங்கள் முழு வாழ்க்கையையும் இழக்கின்றோம் என்ற உண்மை தெரியவரும்.
அதைவிட ஆறு மாதங்களிற்கு வாகணங்கள் ஓட்ட முடியாது. அப்படி ஓட்ட ஆரம்பித்ததும் அதில் பொருத்தப்படும் கருவி குறிப்பிட்ட நிமிடங்களிற்கு அவர்கள் தங்களது சுவாசத்தை ஊதி மது இல்லையென்பதை உறுதி செய்யாவிட்டால் வாகணம் அப்படியே நின்று விடும்.
குற்றப்பட்டியலில் இடம்பெற்றதால் வேலை தேடுவதில் ஆரம்பிக்கும் சிரமம் அவர்களது வாழ்க்கை நாசம் செய்து விடும். எனவே மதுக் குடிப்பவர்கள் யாரும் வாகணத்தைத் தொடுவதானால் சிறை செல்வதையும் நினைத்துப் பார்ப்பதை விட,
தாங்கள் வாகணத்தை ஓட்டி அப்பாவியாக இதர வாகணங்களில் வரும் பலரது உயிருக்கு உலை வைக்கப் போகின்றார்கள் என்பதையும் தாங்கள் மதுபோதையில் மேற்கொள்ளும் விபத்துக்கள் அவர்களது வாழ்நாள் முழுக்க அவர்களை வாட்டி வதைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மது பாவித்து விட்டு வாகணமோட்டும் சாரதிகளிற்கு எதிரான தாய்மார்கள் அமைப்பின் ரொறன்ரோப் பிரிவின் தலைவியாக இருக்கும் எவரில்டா ரத்னகுமார் அண்மையில் ஒரு புதுமையான காரியத்தைச் செய்துள்ளார்.
ரோறன்ரோ பொலிஸ் தலைமையகத்தில் மது அருந்துவோருக்கு எதிரான பெண்கள் சங்கம் சார்பில் இருக்கை ஒன்றை அமைத்துள்ளார். அங்கே வரும் பொதுமக்களிற்கு மதுப் பாவித்தலின் தற்பாரியத்தை விளக்கவே இந்த ஏற்பாடு.
கனடாவில் நாளொன்றுக்கு மதுபாவனை சார்ந்ததால் ஏற்படும் விபத்துக்களால் நான்கு பேர் இறப்பதுடன், 175 பேர் காயமடைக்கின்றார்கள் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
No comments:
Post a Comment