யாழில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 1168 குடும்பங்களைச் சேர்ந்த 5047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இதன்போது யாழ்ப்பாண நகரப்பகுதி, நல்லூர், சண்டிலிப்பாய், வேலனை, உடுவில், தெல்லிப்பளை, பருத்தித்துறை உள்ளிட்ட பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த பகுதிகளிலுள்ள தற்காலிக வீடுகள் பகுதியளவில் சேதடைந்திருக்கின்றன. மேலும், இரண்டு வீடுகள் முழு அளவில் சேதமடைந்துள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment