இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவை சேர்ந்த ஆன்மீக தலைவரான ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கர் குருஜி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நேற்று நடந்துள்ளது.
அதேவேளை ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் குருஜியை நேற்று சந்தித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதனிடையே ரவிசங்கர் குருஜி அலரி மாளிகையில் நேற்று ஆன்மீக சொற்பொழிவொன்றை நிகழ்த்தியுள்ளார்.
இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment