கண்டி மாவட்டம் - உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரட்டைபாதை நீயுவ்பீகொக்தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலம் தாழ் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகள் வெடிப்புற்ற நிலையில் காணப்படுவதாகவும், 10 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம் பெயர்ந்து தோட்ட கலாச்சார மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடபளாத்த பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் உலர் உணவு பொருட்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment