சிறிலங்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து நாடுகள் மாத்திரமே இதுவரை உதவிகளை அனுப்பியுள்ளதாக, சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த, சிறப்பு அதிபர் செயலணியின் கூட்டத்தில், அனர்த்த நிவாரணப் பணிகள் தொடர்பாக விளக்கிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“இந்தியா, ஜப்பான், துருக்கி, பாகிஸ்தான், மாலைதீவு ஆகிய ஐந்து நாடுகள் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கியுள்ளன. மேலும் பல நாடுகள், உதவிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளை வழங்குமாறு, அனைத்துலக சமூகத்திடம், சிறிலங்கா அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment