வெள்ளத்தால் நாட்டுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களுக்கான உதவிகளை செய்வதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை.
மக்களின் தேவைக்கேற்றவாறு நிவாரண ஒதுக்கீடு அமையவில்லை. இந்த அரசாங்கம் நிவாரணங்களையும் சர்வதேசம் தரும் வரையில் பார்த்துக்கொண்டுதான் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கில் புலிகளை நினைவுகூர முன்னுரிமை வழங்கும் அரசாங்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்திக் கொடுத்த இராணுவ வீரர்களின் வெற்றி தினத்தை புறக்கணித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
குருநாகல் மாவட்டத்தில் நேற்று முன்னாள் ஜனாதிபதி மக்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் புலனாய்வு செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. ஆட்சி மாற்றத்தில் இருந்து நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஆட்சி மாற்றத்தை வடமாகாணம் சாதகமாக பயன்படுத்திகொள்ளும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் அவர்களின் அரசியல் நகர்வுகள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன. அதை நிரூபிக்கும் வகையில் இப்போது வடக்கில் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை நினைவுகூர்ந்துள்ளனர்.
எனினும் இந்த செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. வடக்கில் புலிகளை நினைவுகூர முன்னுரிமை வழங்கும் அரசாங்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்திக் கொடுத்த இராணுவ வீரர்களின் வெற்றி தினத்தை புறக்கணித்துள்ளது. யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டதில் இருந்து இந்த நாட்டில் இராணுவ வெற்றி தினமாக கொண்டாடப்பட்டுவந்த தினம் இந்த ஆட்சியில் சாதாரண அனுஷ்டிப்பு தினமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது எமது வெற்றியை நிராகரிக்கும் வேலையினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இம்முறை நிகழ்வுகளுக்கு அரசாங்கம் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதை வெளிப்படையாகவே அவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த எம்மை அரசாங்கம் நிராகரித்தாலும் நாம் தொடர்ந்தும் இராணுவ வெற்றிதினத்தை கொண்டாடுவோம்.
மே 19ஆம் திகதி இராணுவ வெற்றி தினத்தை குருநாகலில் கொண்டாட நாம் தயாராகிக்கொண்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இவ்வாறான நிலையில் எமது நிகழ்வுகளை நாம் பிற்போட்டோம். எனினும் நிலைமைகள் வழமைக்கு திரும்பியவுடன் நாம் மீண்டும் வெற்றி தினத்தை கொண்டாடுவோம்.
யுத்த சூழல் நிலவினாலும் இல்லாவிட்டாலும் நாட்டில் தேசிய பாதுகாப்பை பலபடுத்த வேண்டிய தேவை உள்ளது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டவேண்டிய தேவை உள்ளது.
இந்த அரசாங்கமும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் என நினைக்கின்றேன். வடக்கில் நடக்கும் மோசமான சம்பவங்கள் தொடர்பில் சாதாரண கண்ணோட்டத்தில் பார்க்காது தீவிரமாக ஆராய்ந்து பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டவேண்டும்.
வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்ட போதும், புலனாய்வு பிரிவை கட்டுப்படுத்திய போதும் நாம் எச்சரிக்கை விடுத்தோம். வடக்கில் எப்போதுமே பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என நாம் கூறினோம். இப்போதும் அதையே நாம் தெரிவிக்கின்றோம். எனினும் அரசாங்கம் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.
அரசாங்கம் நாட்டை மிகவும் மோசமான பாதையில் கொண்டு சென்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது. பொருட்களின் வரி இருமடங்கு அதிகரித்து சென்றுள்ளது. இன்றைய நிலையில் விலை குறைக்கவேண்டிய பொருட்கள் அனைத்திற்கும் இருமடங்கு வரி அதிகரித்து மக்களின் வயிற்றில் நெருப்பை கொட்டியுள்ளனர். மக்கள் இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்திகளையும் நன்மைகளையும் உணர ஆரம்பித்துள்ளனர்.
கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் இன்று காற்றில் பறந்துவிட்டன. அதேபோல் வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களுக்கான உதவிகளை செய்வதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. மக்களின் தேவைக்கேற்றவாறு நிவாரண ஒதுக்கீடு அமையவில்லை. இந்த அரசாங்கம் நிவாரணங்களையும் சர்வதேசம் தரும் வரையில் பார்த்துக்கொண்டுதான் உள்ளது என்றார்.

No comments:
Post a Comment