கொழும்பு – 13 – மகாவித்தியாலய மாவத்தை, அக்பர் வீதி – 36ஆம் தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமென தேசிய கலந்துரையாடல்கள்
அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். குறித்த ஆலயத்தின் பூஜைகள் மற்றும் தேர்த் திருவிழா எவ்வித தடையும் இன்றி நடைபெற வேண்டும் என்பது தனது உறுதியான நிலைப்பாடு எனவும், அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனி எந்தவித அடிப்படைவாதத்துக்கு இடம் கொடுக்க முடியாது எனவும், கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு கஷ்டங்களுக்குப் பின்னர் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, இந்நாட்டு இந்து, இஸ்லாமிய, பௌத்த, கத்தோலிக்க மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், குறித்த ஆலய பணிகளுக்கு எவரும் இடையூறு விளைவிக்க முடியாது எனவும், இதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை, எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாவித்தியாலய மாவத்தையில் அமைந்துள்ள குறித்த ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் மற்றும் தேர்த்திருவிழாவினை நடத்த அந்த பிரதேசத்தில் வாழும் சில இஸ்லாமியர்களால் தடையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment