ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய இலங்கை அரசாங்கம் ஏற்படுத்த போகும் தேசிய விசாரணை பொறிமுறையின் கீழ் போர் குற்றம் சுமத்தப்படும் நபர்களின்
சட்டத்தரணிகளுக்கான கட்டணங்களை அரசாங்கமே செலுத்தவுள்ளது.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இராணுவ அதிகாரிகள் சிலரிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ஜெனிவா அறிக்கை சம்பந்தமாக இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் வழங்கியுள்ளனர்.
இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் அவர்களுக்குகாக மேற்கொள்ளப் போகும் விடயங்கள் குறித்து அமைச்சர் ரணவக்க, பல முறை இராணுவத்தினருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
தேசிய விசாரணை பொறிமுறை கலப்பு பொறிமுறை அல்ல என அமைச்சர் இராணுவ அதிகாரிகளிடம் கூறியுள்ளார். எனினும் இந்த பொறிமுறையை ஏற்றுக்கெள்ளக் கூடிய நிலைமைக்கு மாற்றுவதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் உதவி மாத்திரம் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிடம் குற்றங்களை ஏற்று வாக்குமூலம் வழங்கும் நபர்களுக்கு தண்டனை வழங்கப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மத தலைவர்கள் போன்ற கருணையுள்ளவர்களை கொண்டிருக்கும் எனவும் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment