October 10, 2015

வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி உரிமையை வைத்திருப்பதற்கு நெகிழ்வான கொள்கை நடைமுறை!

வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி உரிமையை வைத்திருப்பதற்கு அரசு நெகிழ்வான கொள்கையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளிநாட்டவர்களின்
முதலீடுகள் வருவதற்கான அரசின் முயற்சியில் இதுவும் அடங்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.சார்க் நாடுகளின் பிரதிநிதிகளைக் கடந்த வாரம் கொழும்பில் சந்தித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பரம்பரையாகவுள்ள காணிப்பிரச்சினை பற்றி வெளிநாடட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். அது நாங்கள். சரியான முதலீடுகள் வர புதிய அரசு தேவையான சலுகைகள் வழங்கும்.நீங்கள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய முடியும் என நிதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment