October 10, 2015

ஜே.ஆர் ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேசியத்தலைவரால் நிராகரிக்கப்பட்டவர்’ தான் இந்த சீ.வி.கே.சிவஞானம்!

ஜே.ஆர் ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேசியத்தலைவரால் நிராகரிக்கப்பட்டவர்’ தான் உந்த சீ.வி.கே.சிவஞானம்! வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
‘வரலாற்றை எவரும் அவ்வளவு இலகுவில் இருட்டடிப்புச் செய்துவிட முடியாது. அதனை தமக்குச் சார்பாக மாற்றியமைத்து விடவும் முடியாது.’
என்ற ஒரு கசப்பான உண்மையை, இந்த உலகத்தில் மறுப்பேதுமின்றி எல்லோரும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமல்ல, தலைவரால் நேசிக்கப்பட்ட (தலைவரின் அன்புக்குரிய) மனிதர்களுக்கும் தமிழ் மக்கள் மனதில் என்றைக்குமே நிலையான இடமுண்டு.
ஆனால் தேசியத்தலைவரால் ‘தமிழ் இனத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள், தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள், சிறீலங்கா மற்றும் இந்திய அரசுகளின் கைக்கூலிகள், தமிழ் இனத்தின் விடுதலைக்கு விரோதமானவர்கள், தமிழ் மக்களின் கௌரவமான வாழ்க்கைக்கு குழிப்படுக்கை வெட்டுபவர்கள்’ என்று இனங்காணப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்களில் பலரும் இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெயரால் அரசியலுக்கு உள்ளே வந்து, போலித்தமிழ் தேசிய போர்வையை உடுத்துக்கொண்டு, தமிழ் இனத்தின் இருப்புக்கு உலை வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வாறானவர்களில் ஒருவர் தான், தற்போது வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவராக இருக்கும் உந்த சீ.வி.கே.சிவஞானம்!
CVK 1உங்களுக்கு வரலாறு தெரியுமோ… தெரிந்துகொள்ளுங்கள்!
சென்னை தினத்தந்தி பத்திரிகை ‘இலங்கைத் தமிழர் வரலாறு’ பற்றி எழுதிவரும் தொடரை இலங்கையில் வீரகேசரி நாளிதழும் பிரசுரித்து வருகின்றது. அதில் 06.10.2015 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள 92வது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1987 காலப்பகுதியில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னர் இடைக்கால நிர்வாக சபைக்கு இலங்கையின் தமிழ் மாநிலத்தின் முதலமைச்சராக யாரை நியமிப்பது என்பதில், இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கும் முறுகல்நிலை ஏற்பட்டதால், தமிழர் பகுதிகளில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
முதலமைச்சராக சீ.வி.கே.சிவஞானத்தை (அப்போது யாழ்ப்பாணம் நகரசபை ஆணையாளராக இருந்தவர்) நியமிப்பதாக ஜெயவர்த்தனா அறிவித்தார். ‘சிவஞானத்தை ஏற்க முடியாது. என்.பத்மநாதனை (உதவி அரசாங்க அதிபர்) நியமிக்க வேண்டும் என்று பிரபாகரன் அவர்கள் வலியுறுத்தினார்.
முதலமைச்சர் நியமனம் தொடர்பில் உடன்பாடு ஏற்படாததால், தமிழ் மாநிலத்தின் இடைக்கால நிர்வாகசபை எப்போது செயல்படத்தொடங்கும்? என்ற சந்தேகம் எழத்தொடங்கிற்று. இதற்கிடையே இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே ஆயுத மோதல்களும் இடம்பெறத்தொடங்கி விட்டன.
கவனியாதோர் கவனத்துக்கு:
இன்றைக்கு 28 வருடங்களுக்கு முன்னரே ஆளும் அரசாங்கத்தால் சிபாரிசு செய்யப்படுமளவுக்கு அரசின் நம்பிக்கைக்குரியவராக சீ.வி.கே.சிவஞானம் இருந்திருக்கின்றார் என்பதும், 28 வருடங்களுக்கு முன்னரே ‘இவர் பிழையான ஆள், சரிப்பட்டு வரமாட்டார், அரசின் விசுவாசி’ என்று தேசியத்தலைவரால் இனங்காணப்பட்டு சீ.வி.கே.சிவஞானம் நிராகரிக்கப்பட்டிருக்கின்றார் என்பதும், நீங்கள் இன்னும் கூடுதலாக கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
முதலமைச்சர் கனவில் உழவும் மாவையும் – சீ.வி.கே.சிவஞானமும்!
இப்போதும் ‘அதே முதலமைச்சர் கனவிலும், அதே அரசின் விசுவாசியாகவும்’சீ.வி.கே.சிவஞானம் இருந்துகொண்டு, வடக்கு மாகாணசபையை நலினப்படுத்தும், பலவீனப்படுத்தும், அதனை கையாலாகாத்தனமாக காட்டும் செயல்பாடுகளில் தரித்திரமாக ஈடுபட்டு வருகின்றார்.
‘ஈழத்தில் நடத்தப்பட்டுள்ள தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதியும் (சர்வதேச விசாரணை), அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பும்’ வேண்டுமென காரசாரமாக வலியுறுத்திவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, அவரை பதவி கவிழ்த்து முதலமைச்சர் பதவியை பற்றிப்பிடிக்கும் முயற்சிகளில் கடுமையாக ஈடுபட்டு வருகின்றார்.
அப்படி பதவி கவிழ்த்து விட்டால், ‘இன்னும் மீதமுள்ள மூன்று வருடங்களுக்கு சீ.வி.கே.சிவஞானமும், ஐந்து வருடங்கள் முடிந்த பின்னர் வடக்கு மாகாணசபைக்கு புதிதாக நடைபெறும் தேர்தலில் மாவை.சேனாதிராசாவும் முதலமைச்சராக இருப்பது’ என்று உடன்பாடு காணப்பட்டு, ‘மாவை – சீ.வி.கே.சிவஞானம் கூட்டணி’ சதிராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமையை பகிரங்கமாக அவதானிக்க முடிகின்றது.
இந்தக் கூட்டணிக்குள் கேசவன் சயந்தன், அரியகுட்டி பரஞ்சோதி, சிவயோகன், சுகிர்தன், கஜதீபன் ஆகியோர் தீவிர செயல்பாட்டாளர்களாக இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
-கவரிமான்-

No comments:

Post a Comment