யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களை பாலியல் விருப்புக்கு அழைத்த தொண்டு நிறுவனம் ஒன்றின் அதிகாரி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியின் கீழ் வீடுகள் நிர்மானிக்கப்படுகின்றன.
இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்க செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரி ஒருவர், கணவனை இழந்த பெண்களை பாலியல் விருப்பத்துக்கு அழைத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் இந்திய தூதரகமும், குறித்த தொண்டு நிறுவனமும் இணைந்து உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகம் அதிக கரிசனைக் கொண்டிருப்பதாகவும், இந்த நிலையில் விரைவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment