February 16, 2015

விஜயகலா! அதிர்கின்றது யாழ்ப்பாணம்!

முன்னாள் ஜக்கிய தேசியக்கட்சி சார்பு அமைச்சர் மகேஸ்வரன் பாணியில் அவரது மனைவியான விஜயகலாவும் கட்டைப்பஞ்சாயத்து மற்றும் மிரட்டல்களில் களம்
புகுந்துள்ளமை பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. இது வரை யாழ்ப்பாணத்திலுள்ள ஜந்திற்கும் அதிகமான காவல்நிலையங்களிற்கு சென்று அங்கு காவல்துறை அதிகாரிகளை மிரட்டியும் அவர்கள் முன்னதாகவே பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் பற்றியும் செய்திகள் கசிந்துள்ளது.
அவரால் கொலை அச்சுறுத்தலிற்குள்ளாகியிருக்கும் வயோதிப தாய் ஒருத்தியைத் தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக விஜயகலா முறைப்பாடு செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:-
காரைநகரினை்ச் சேர்ந்த யுவதியொருத்தி காதல் வசப்பட்ட நிலையில் உரும்பிராய் பகுதியினைச் சேர்ந்த இளைஞனொருவருடன் வீட்டிலிருந்து வெளியறி தலை மறைவாகியுள்ளார். குறித்த யுவதியின் தநதையார் விஜயகலாவின் உறவினர் என்ற அடிப்படையில் அவரது முறைப்பாட்டையடுத்து இளைஞனது வீட்டிற்கு தனது அடியாட்களுடன் சென்றிருந்த விஜயகலா அங்கிருந்த இளைஞனின் வயோதிப தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
முன்னதாக கோப்பாய்க் காவல் நிலையத்தில் யுவதியின் தந்தை முறைப்பாடொன்றையும் செய்துள்ளார். இது தொடர்பான முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட காவல்துறை நடத்திய விசாரணையில் யுவதி தனது மனப்பூர்வமான சம்மதத்தை வெளிப்படுத்தி கடிதம் வழங்கியுள்ளதுடன் தாம் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தொடர்ச்சியாக விஜயகலா மற்றும் அடியாட்களது மிரட்டலையடுத்து தலைமறைவாகி வன்னி காட்டில் தலைமறைவாகியிருப்பதாகவும் அவர்களைக் கடத்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது விசேட படையணி முதல் முல்லைதீவு காவல்துறை வரை முயன்றமையும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கோப்பாய் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்ட இளைஞனின் வயோதிபத் தாயை இரவு உடையில் அங்கு வந்த விஜயகலா மிரட்டி தாக்க முற்பட்டதாகவும் இதையடுத்து அவரை அங்கிருந்து காவல்துறை அதிகாரிகள் வெளியேற்றியதாகவும் தெரியவருகின்றது. இதனால் சீற்றமடைந்து கோப்பாய் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்த அவர் ஏற்பாடு செய்த போதும் மக்கள் எவரும் பங்கெடுக்க வராமையினால் அது கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு தொடர்ச்சியாக விஜயகலா கொடுத்துவரும் தலையிடியினையடுத்து தனக்கும் மகனிற்கும் தொடர்புகள் ஏதுமில்லையென்பதை வெளிப்படுத்த தொலைபேசி வழி முற்பட்ட அத்தாயையே தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விஜயகலா முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இன்று காவல்துறைக்கு அழைக்கப்பட்ட அந்த வயோதிப தாய் தனக்கு விஜயகலாவின் தொலைபேசி இலக்கத்தை தந்திருந்தது அவரே எனவும் அந்த தொலைபேசி இலக்கத்திற்கு மகன் எங்குள்ளான் என்பதை அறித்தருமாறு கூறியதுடன் தனது அடியாட்களுடன் வீட்டிற்கு வந்து கொலை அச்சுறுத்தலை அவர் விடுத்ததாகவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
அத்துடன் தனது தரப்பு நியாயத்தை சொல்ல முற்பட்ட தன்னை கொலைமிரட்டல் விடுத்ததாக சிக்கவைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment