April 22, 2015

மகளை கொன்று தாய் தற்கொலை!

கும்மிடிப்பூண்டியை அடுத்த தம்புரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). டெய்லர். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவி (25). மகன் மஞ்சித் குமார் (5). மகள் ஜீவிதா (3). இந்த நிலையில் பொன்னேரியை அடுத்த கொக்குமேடு கிராமத்தை சேர்ந்த தேவியின் தாய் லலிதா (44) கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:–
எனது மகள் தேவியை தம்புரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மகன் சுரேஷ்க்கு 25 சவரன் நகைகளுடன், சீர் வரிசை பொருட்கள் என சுமார் ரூ.10 லட்சம் செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தேன்.
நான் எனது மகளுக்கு கொடுத்த நகைகளையும், பொருட்களையும் விற்று குடித்து விட்டு அவரது வாழ்க்கையை சுரேஷ் அழித்து விட்டார். பல முறை தேவியை அடித்து உதைத்து தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யவும் சுரேஷ் முயற்சித்துள்ளார். இத்தகைய கொடுமைகளுக்கு சுரேஷின் தந்தை மணிமாறன் மற்றும் தாய் மாரியம்மாள் ஆகியோரும் உடந்தையாக இருந்து உள்ளனர்.
தாய், மகள் சாவு
இந்த கொடுமைகளை தாங்க முடியாத தேவி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது இனி தவறு எதுவும் செய்ய மாட்டேன் என்று போலீஸ் நிலையத்தில் சுரேஷ் எழுதி கொடுத்ததால் போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்த நிலையில் கடந்த 19–ந் தேதி இரவு குடித்து விட்டு தேவியை சுரேஷ் கொடுமைப்படுத்தியதால் பூச்சி மருந்தை தனது மகள் ஜீவிதா (3), மகன் மஞ்சித்குமார் ஆகியோருக்கு கொடுத்து விட்டு தானும் குடித்து விட்டார்.
இதில் தேவியும், அவரது மகள் ஜீவிதாவும் உயிரிழந்து விட்டனர். மஞ்சித்குமார் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
மரண வாக்குமூலம்
தேவி சாகும்போது தனது சாவுக்கும் குழந்தையின் சாவுக்கும் கணவர் சரேஷ்தான் பொறுப்பு என ஆஸ்பத்திரியில் மரண வாக்குமூலம் அளித்து உள்ளார். எனவே எனது மகள் மற்றும் பேத்தி ஜீவிதா சாவுக்கு காரணமான சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் மகள் சாவுக்கு காரணமான சுரேஷை தேடி வருகின்றனர்.Mother Cild

No comments:

Post a Comment