April 16, 2015

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு அருகில் முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயம்!

காங்கேசன்துறை வீதி, தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு அருகில் புதன்கிழமை (15) இரவு முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில், தெல்லிப்பளை ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் மதுபோதையில் இருந்ததுடன், ஓட்டுநர் போதையில் நிலைதடுமாறியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று தெல்லிப்பளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

No comments:

Post a Comment