இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வட மாகாண மீனவ அமைப்புகள் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் கையளித்துள்ளன.
வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் நடவடிக்கை எடுக்ககோரி மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசம், யாழ் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சம்மேளனம், கிளிநொச்சி மீனவ கூட்டுறவுச் சங்க சமாசம் ஆகிய இணைந்து மகஜர் ஒன்றை,
கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா அனுரா குமார திசானாயக அவர்களின் அலுவலகத்தில் வைத்து மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித கேரத்திடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் இலங்கை கடற்பரப்பினுள் வருகையால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் தீர்வினை பெற்றுதரகோரி குறித்த மகஜரில் குறிப்பிடபட்டுள்ளது.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் பின்வருமாறு,
30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் யுத்தம் முடிவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்தும் இன்னமும் யுத்த பாதிப்பிலேயே வாழுகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்து ஏதோ ஒரு வழியில் தமது மீன்பிடித்தொழிலை மீள ஆரம்பித்த மீனவர்களுக்கு இன்னமும் பல தடைகள் காணப்படுகின்றன.
சிறியளவில் தமது தொழிலை கட்டியெழுப்புகின்ற மீனவர்களுக்கு இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நுழையும் இழுவைப் படகுகளின் தாக்கம் மிக பெரியளவிலான பிரச்சினையாகும்.
1000 தொடக்கம் 1500 வரையிலான இந்திய இழுவைப் படகுகள் வாரத்திலே மூன்று நாட்கள் (திங்கள், புதன், சனி) எமது கடற்பரப்பனை ஆக்கிரமித்து இரட்டை வலை மடிகளை, அதாவது அகன்ற மடிகளைக் கொண்ட வலைகளை பயன்படுத்துகின்றனர்.
அடித்தளம் முதல் மேற்பரப்பு வரையுள்ள மீன்களை வாரி அல்லக்கூடியதாக அவை காணப்படுவதால் பெறுமதி மிக்க கடல் வளங்களான இரால், நண்டு, கடலட்டை, சங்கு போன்றவைகள் இன்னும் பல முக்கிய மீனினங்களும் இந்திய இழுவைப் படகுகளினால் அள்ளிச் செல்லப்படுகின்றன.
மேலும் கடல் வளங்களான பவளப்பாரைகள், கடற்தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. வருடமொன்றிற்கு ரூபா 5.293 மில்லியனுக்குமேல் இந்திய மீனவர்களால் எமது வளம் சுரண்டப்படுகின்றது.
அத்தோடு மீனவர்களின் பல ஆயிரம் பெறுமதிமிக்க மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வலைகள் சேதத்துக்கு உள்ளாக்கப்படுகின்றது.
இதனால் இழுவைப் படகுகள் அத்துமீறி வருகின்ற நாட்களில் எமது மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து கொள்கின்றனர். இதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி வருகின்றது.
தனது மீன்பிடி வருவாயின் மூலம் தமது குடும்பத்திற்காக செலவு செய்த மீனவர்கள் தனது வறுமை நிலையில் தன்னுடன் தங்கி வாழும் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளை எண்ணி தினம் தினம் கவலை அடைகின்றான்.
தொடர்ந்து தனது வாழ்வாதாரத்துக்கு ஏது செய்வதென்று தெரியாது தனது கவலையை மறக்க போதைப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.
இதனால் நாளடைவில் இம்முழுக் குடும்பமுமே கடனாளியாக, நோயாளியாகமாற்றப்பட்டு இறுதியில் தற்கொலைக்கு செல்லவும் அல்லது நாட்டை விட்டு வெளியேரவும் முற்படுகின்றனர்.
நாம் அடுத்த சந்ததிக்கு கடல் வளத்தை பாதுகாத்துக் கொடுக்க நினைத்தாலும் எமது கண்முன்னே எமது மீனவர்கள் படும் துன்பங்களை எவ்வாறு கலைவது என்பது தெரியாது திண்டாடுகின்றோம். இம்மீன்பிடியூடான ஏனைய தொழில்களும் இதே நிலையிலேயே உள்ளது.
வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்பாவது எமது மீனவர்களின் பிரச்சினைகள் தீருமென நம்பிய வேளையில் தென் பகுதி மீனவர்களின் மிதமிஞ்சிய வருகையாலும்,
ஆழம் குறைந்த கடற்பகுதிக்குள் சிலிண்டர் தொழில்களை மேற் கொள்வதனாலும், கடல் அட்டைகளின் இனப்பெருக்க நேரத்தில் இவற்றை பிடிப்பதனால் இவ் இனமே அழிக்கப்படுகின்ற அபாயமும் ஏற்படுவதோடு, இவ்வாறான செயற்பாட்டில் பாதிப்புக்குள்ளாகி பட்டினி வாழ்வை சிறு மீனவர்கள் எதிர்நோக்குகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயத்திலும் வருடா வருடம் பருவ காலம் ஆரம்பி;கும் போது மீனவர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிக்கொணர்ந்தும், எதுவிதமான தீர்வும் எட்டியதாக இதுவரைக்குமில்லை.
இத் துன்பங்கள் போதாதென்று இயற்கையின் சீற்றத்தினால் இப்பகுதி மீனவர்கள் பல இடர்பாடுகளை அனுபவித்து வருவதோடு,
கடல் அனர்த்த காலங்களில் தொழிலுக்கு செல்வது தடைசெய்யப்பட்ட பல வேளைகளில் கூட உரிய திணைக்களங்களால் விபரங்கள் திரட்டப்பட்டும் எதுவிதமான அனர்த்த உதவிகளும் இப்பகுதி மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது வேதனையை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.
பொருளாதார ரீதியிலும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைந்து வந்த எமது மீனவ சமூகமானது மேற்குறிப்பிட்ட அனைத்து செயற்பாடுகளினாலும் மறைமுகமன ஒரு தாக்கத்தை அனுபவத்துக் கொண்டிருப்பது தான் தற்போதைய உண்மையான நிலையகும்.
இலங்கை, இந்திய கடல் எல்லை வெறுமனே தேசப்படத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.வடக்கின் கரையோரப் பிரதேசங்கள் இந்திய எல்லைகள் போன்ற நிலை தோன்றியுள்ளது.
எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி இந்திய இழுவைப் படகுகள் வடபகுதி கடற்பரப்பில் மிக சுதந்திரமாக தொழில் செய்வதற்கான வாய்ப்பை இலங்கை அரசு விட்டுக்கொடுத்துள்ளது.
எனினும் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டுவதற்கு தாம் எந்த விதத்திலும் அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசும் கடற்தொழில் அமைச்சரும் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
எனினும் அதை நடைமுறைப்படுத்தி வடக்கு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்க முன் வராதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெறுவதற்காக இம் மீனவர்கள் கடற்தொழில் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் இது வரை தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள், அமையான ஊர்வரங்கள், பாதையாத்திரைகள், ஊடகமநாடுகள், பொறுப்புமிக்கவர்களுடனான சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் நடத்தியும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.
இலங்கை, இந்திய பிரதமர்களும் மற்றும் தமிழக முதலமைச்சர் கோருவது போல் இரு நாட்டு மீனவர்களும் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்ற அவர்களது கருத்தானது,
இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகள் எமது நாட்டின் கடற்பரப்பில் தொழில் செய்ய அனுமதிப்பதற்காக மட்டுமென்றால் இப்பேச்சு வார்த்தையில் எமது மீனவர்கள் சார்பாக எந்தவொரு அமைப்பும் பங்குபற்றாமல் இருப்பதே எமது மீனவ இனத்துக்கு செய்கின்ற நன்மை ஆகும்.
இப் பேச்சு வார்த்தையின் பயனாக இரு நாட்டு மீனவர்களும் தங்கள் நாட்டு கடல் எல்லையை தாண்டாதிருப்பதை உறுதி செய்வதாக அமைய வேண்டும்.
பேச்சு வார்த்தை என்ற போர்வையில் ஒப்பந்த அடிப்படையில், வாரத்தில் மூன்று நாட்கள். வாரத்தில் இரண்டு நாட்கள், ஏன் ஒரு நாள் என்ற பேச்சுக்கே இடம் வழங்க முடியாது எமது கடற்பரப்புக்குள் இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறாமலும், எமது கடல் வளத்தை சுரண்டி அழிக்காமலும், பாதுகாப்பதே எமது நோக்கமாக கொள்ள வேண்டும்.
இந்திய அரசு அபிவிருத்தித் திட்டங்கள் தருகின்றோம் என்று கூறி எமது கடல் வளத்தை சுரண்டுவதே அவர்களின் நோக்காக இருப்பது தெட்டத் தெளிவாகின்றது.
ஜனநாயக நாடு என்ற போர்வையை போர்த்திக் கொண்டு ஒரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைவது அந்நாட்டின் இறைமைக்கு எதிரான செயல் என்பது தெரியாதா?
யுத்த புகலிடம் கோரி எமது மக்கள் இந்தியாவிற்கு சென்றார்கள். இவர்கள் சென்ற படகுகளும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மீளவும் எமது நாட்டுக்கு திரும்பியபோது எவருக்காவது படகுகள் இயந்திரங்கள் கொடுக்கப்பட்டனவா? ஆதலால் அத்து மீறி ஒரு நாட்டின் இறைமையை மீறி உட்பிரவேசிக்கின்ற படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற எமது கோரிக்கை தவறு என்று கூறுவது ஏற்க முடியாதது.
எதிர்பார்க்கப்படும் இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தை எமது கடல் பிரதேசத்தை விட்டு கொடுப்பதாக இருந்தால் இப்பேச்சு வார்த்தையால் எமது மீனவர்களுக்கு எந்த பலனும் ஏற்படாது.
பேசப்படும் விடயம் எமது மீனவர்களுக்கு முழுமையான தொழில் சுதந்திரத்தை வழங்க வேண்டும். இந்திய மீனவர்களின் அத்து மீறிய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
எமது கடல் வளத்தை எமது மீனவர்கள் அனுபவிக்க வாரத்தில் அனைத்து நாட்களும் தொழில் புரிவதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்.
அத்தோடு வடமாகாண சபையானது இந்திய அரசுடன் எமது பகுதியின் அபிவிருத்தி தொடர்பாக நல்லுறவை ஏற்படுத்த நினைக்கும் அதே வேளையில் எமது பகுதி மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமலும் விழிப்போடு செயற்படும்படி நாம் கேட்டு நிற்கின்றோம்.
எனவே இம்மீனவர்களுக்காக அரசு என்ன செய்யப் போகுகின்றது. வடமாகாண சபை எவ்வாறு இவர்களுக்கு உதவப் போகின்றது என்பது எமக்கு புரியவில்லை.
அடுத்தவர் பசி போக்க உணவளித்த மீனவன் தம் பசியினை போக்கிட பிறரிடம் கையேற்தும் நிலை வறுவதற்கு முன் ஏதாவது நாம் செய்தே ஆக வேண்டும்.
01. விவசாயிகளுக்கு பழைய கடன்களை ரத்து செய்தது போல் யுத்தம் மற்றும் இந்திய மீனவர்களால் அழிவுக்குள்ளான வடபகுதி மீனவர்களின் பழைய கடன்களும் ரத்து செய்யப்பட்டு வடபகுதி மீனவர்கள் புதிய தொழில்களை தொடங்க மத்திய அரசு தாராள உதவிகளை செய்ய வேண்டும்.
02. உயிர் உபகரண இழப்புகளுக்கு உரிய நஸ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும்.
03. கடல்வளத்தை பாதுகாக்க கடல் முகாமைத்துவம் முழுமையாக செய்யப்பட வேண்டும்.
இவற்றுக்காக அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், ஆன்மீக அமைப்புக்கள், ஊடக அமைப்புக்கள் அனைவரும் இனைந்து இதற்கான தீர்வை பெற்றுக்கொடு முன்வரவேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

No comments:
Post a Comment