October 11, 2015

வடபகுதி இளைஞர்கள் காவற்துறையில் இணைய நேர்முக தேர்வை நடத்தியது !(படங்கள் இணைப்பு)

காவற்துறையினர் இணைந்து கொள்ள வடபகுதி இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை காவற்துறையில் இணைந்து கொள்ளும் நேர்முகப் பரீட்சை நேற்று யாழ்
மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 687 பேர் நேற்றைய நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டுள்ளனர். சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழு இந்த நேர்முக தேர்வை நடத்தியது.

அதேவேளை வவுனியா பிரதேச இளைஞர்களுக்கான நேர்முக தேர்வு வவுனியா காமினி கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது.

வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒத்துழைப்புடன் பணியாற்றும் நோக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மொழி ரீதியான பிரச்சினையை தீர்க்கும் நோக்கிலும் தமிழ் இளைஞர்களை காவற்துறையில் இணைந்து கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வவுனியா சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் வசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவையில் இணையும் யாழ்.கிளி. இளைஞர்கள்! நேர்முகத்தேர்வு நடைபெறுகின்றது!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறுகின்றது.

மேற்படி இரு மாவட்டங்களிலும் இருந்து 687 இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகத்தேர்வே தற்போது நடைபெற்று வருகின்றது.

கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவினர், பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான முதலாவது நேர்முகத் தேர்வை நடத்தினார்கள்.



இன்றைய தினம் கல்விச் சான்றிதழ்கள் பார்வையிடப்பட்டதுடன், அவர்களுடைய உயரம் நெஞ்சு சுற்றளவு என்பன அளவிடப்பட்டுள்ளன.

இந்த நேர் முகப்பரீட்சைக்க சுமார் ஆயிரம் பேருக்கு மேல் சமூகமளித்திருந்தார்கள் என்பதும் குறிப்படத்தக்கதாகும்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் இன்றைய நேர்முகத் தேர்வுக்கு தோற்றியிருந்தனர்.

இதேவேளை நாளைய தினம் வவுனியா மாவட்ட இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.



No comments:

Post a Comment