மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த பலூன் தற்பொழுது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பலுான் அல்கொலய்ஸர் குழாயினால் ஊதப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
புதிய முறையில் பலூன் சாதாரணமாக சந்தேக நபரினால் ஊதச் செய்யப்பட்டு பின்னர் அல்கொலய்ஸர் குழாயை பலூனில் பொருத்தி காற்றை வெளியேற்றி பரிசோதனை நடாத்தப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பழைய பலூனில் பரிசோதனையின் பின்னர் சீல் வைக்கப்பட வேண்டியிருந்ததாகவும், புதிய பலூன் பரிசோதனையின் போது அவ்வாறு சீல் வைக்கத் தேவையில்லையெனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment