இனம் தெரியாத நபர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தன்னைக் கடத்தியதாக கூறி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் முறைப்பாட்டொன்றை சுன்னாகம் ஏழாலை மயிலங்காட்டைச் சோந்த நபர் ஒருவர் செய்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் முனியப்பர் வீதியில் வைத்து இனம் தெரியாதவர்கள் வாகனத்தில் தன்னை கடத்திச் சென்றதாகவும் பின்னர் அவர்கள் தன்னை தாக்கியதாகவும் அவருடைய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில வாகனத்தில் கொண்டுவந்து தன்னை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இறக்கிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முறைப்பாட்டைச் செய்தவர் முன்னாள் வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினராக இருந்து பின்னர் அதனை ராஜினாமாச் செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில இனைந்து கொண்டவரான எஸ்.சிவநாதன் (வயது 38) என்பவராகும்;.இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிசார் விசாரனைகளை மேற்க் கொண்டுள்ளார்கள்

No comments:
Post a Comment