தலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர்விகடனுக்கு வழங்கிய பேட்டிதமிழர்கள்பெருவாரியாக வாழும் யாழ்ப்பாணம்மீது ஜெயவர்த்தனாவின் விமானங்கள்வெறித்தனமாகக் குண்டுகளை வீச…சிங்களவர் படை நகருக்குள் நுழைந்துதாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டதுஎன்னும் செய்தி நம்மை பதைபதைக்கச்செய்தது.இருப்பினும், தொடர்ந்துவிடுதலைப்புலிகள்
நிகழ்த்தியவீராவேசமான எதிர்த்தாக்குதலைச்மாளிக்க முடியாமல் சிங்களஇராணுவம் திணறிப்போய்பின்வாங்குகிறது என்னும் செய்திசற்று நிம்மதியைத் தருகிறது.
விடுதலைப்புலிகளால் சகல வசதிகளோடு இருக்கும் சிங்களஇராணுவத்தைத் தொடர்ந்து சமாளிக்கமுடியுமா? சிங்கள ஓநாய்கள்ஒருவேளை உள்ளே புகுந்துவிட்டால்,அப்பாவித் தமிழ் மக்களின் கதிஎன்னவாகும்? இது போன்ற கவலைகள்வேறு மனதை நெருடின.உண்மையில் அங்கு தற்போதுநிலைமை எப்படி இருக்கிறது?
இதுபற்றி யார் நேரடியாக நமக்குத்தகவல் சொல்வார்கள்?திடீரென்று, விடுதலைப்புலிகள்இயக்கத் தலைவர் பிரபாகரன்சென்னைக்கு வந்திருக்கும் தகவல்கிடைத்தது.அவர் சென்னையில் இருக்கிறாரா,இலங்கையில் இருக்கிறாராஎன்பதெல்லாம் இரகசியம் என்பதால்,நினைத்ததும் சந்தித்துவிட முடியாதநிலை! தொடர்புகொண்டோம். மறுநாள் காலை சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. கூடவே, நாங்கள் வந்து அழைத்துப் போவோம் என்று சொல்லிஅனுப்பினார்கள்.
மறுநாள் காலை 9 மணிக்கு இரும்பைப்போல் உடல்வாகுகொண்ட மூன்று இளைஞர்களுடன் ஒரு வான் நம் அலுவலகத்துக்கு வந்து நிற்க, ஏறி அமர்ந்தோம். இளம் புலிகள் சென்னை வீதிகளில், படுலாவகமாக வானை ஓட்டுகிறார்கள்! சென்னை இந்திரா நகரில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையகம்… தேதி மே 21. காலை மணி 9.30. வீட்டைச் சுற்றி விடுதலைப் புலி இயக்கத்தின் இளைஞர்கள்… உள்ளே மாடி ஹாலில் ‘தம்பி’ என்று செல்லமாக அழைக்கப்படும் அவர்கள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்!
சற்று பருமனான, ஆனால் வலுவான உடல்வாகு… ரொம்ப உயரம் இல்லை. வகிடு இல்லாமல் மொத்தமாகத் தூக்கி வாரப்பட்ட சீரான தலைமுடி… தீர்க்கமான விழிகள்… நேருக்கு நேர் நம் கண்களைப் பார்த்துப் பேசுகிறார். அடர்த்தியான கச்சிதமான மீசை பிரபாகரனுக்குத் தனி கம்பீரத்தைத் தருகிறது. நாம் அங்கே சந்தித்தபோது, ஈழத்தில்இருந்து வந்துகொண்டு இருந்த செய்திகளை அவருடைய தோழர்கள் ‘டைப்’ அடித்து அவரிடம் காட்டிக்கொண்டு இருந்தனர். பிரபாகரன்அவற்றைக் கூர்ந்து படித்துவிட்டுச் சிலசெய்திகளை ‘ஓகே’ செய்தார். அவைவெளியுலகம் அறியபத்திரிகைகளுக்கு உடனுக்குடன்அனுப்பப்பட்டன.
வல்வெட்டித்துறையில் இலங்கைஇராணுவம் விமானம் மூலம் குண்டுவீசிய செய்தி அப்போது வந்தது.வீராவேசமாக எதிர்த் தாக்குதல்நடத்தியதில் எட்டு விடுதலைப் புலிகள்பலியானார்கள். இந்தச் செய்தியைபிரபாகரன் நம்மிடம் படித்துகாட்டிவிட்டுச் சற்று மௌனமானார்.தமிழ் மக்களின் பாதுகாப்பு பற்றிக்கவலையோடு கேட்டோம்.
இலங்கை இராணுவம் நடத்தும் இந்தவிமானத் தாக்குதலில் மக்கள் அதிகம்இறந்து விடவில்லை. காரணம்,இம்மாதிரி விமானத் தாக்குதல்களைஇலங்கை அரசு நடத்தப்போவதை சிலவாரங்களுக்கு முன்பே தமிழ்ப்பகுதிகளில் எச்சரித்து விட்டோம்.ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழிகள்வெட்டப்பட்டுள்ளன. ஆண் துணைஇல்லாத வீடுகளில் எங்கள் இயக்க வீரர்கள்பதுங்கு குழிகளை வெட்டிஉதவினார்கள். விமான ஓசைகேட்டவுடனேயே குழிகளில் பதுங்க,இப்போது குழந்தைகள் கூடப் பயிற்சிபெற்றுவிட்டார்கள் என்றார் பிரபாகரன்.இலங்கை இராணுவ விமானம் மூலம்வீசப்படும் குண்டுகள் பெரும்பாலும்‘வேஸ்ட்’ என்று வர்ணித்தார் பிரபாகரன்.‘வேண்டுமானால் மக்களிடையேபீதியைக் கிளப்ப அது உதவலாம்…
மற்றபடி எங்கள் இலக்குகளை அவர்களால்தாக்க முடியாது!அவர்களிடம் ‘நேபாம்’ (விஷ கெமிக்கல்)குண்டுகள் வீசுவதற்குத் தயாராகஇருக்கின்றன. இன்னமும் அந்தகுண்டுகளை அவர்கள்பயன்படுத்தவில்லை. இரக்கம் இல்லாமல்‘நேபாம்’ குண்டுகள் வீசினால்,அப்பாவிப் பொதுமக்கள் துன்பம் அடையநேரிடும்.
யாழ்ப்பாணத்தில் மக்களின் முழு ஆதரவோடு விடுதலைப்புலிகள் ஆட்சிதான்நடக்கிறது. ”வரி வசூலே நாங்கள்தான்செய்கிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்” என்றார்புன்முறுவலுடன் பிரபாகரன்.யாழ்ப்பாணத்துக்கு நீங்கள் எப்போதுபோய் வந்தீர்கள்? என்று கேட்டபோது, ஒருகணம் தயங்கி சிறு புன்னகையுடன்,இடையிடையே போய் வருவேன்… யுத்தமுனையில் எதுவும் எனதுஉத்தரவுகள்படியே நடக்கும். அவசரமுடிவுகள் எடுக்க அங்கே உள்ள எனதுதளபதிகளுக்கு அதிகாரம்கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள்எல்லோரும் நான் எப்படிச்சிந்திப்பேனோ… அப்படிச் சிந்திக்கப்பயிற்சி பெற்றவர்கள்! என்றார்.
விடுதலைப் புலிகளுக்கு நவீனஆயுதங்கள் அத்தனையும்அத்துப்படியாகி இருக்கிறது. மிலிட்டரி சயின்ஸைப் புத்தக வடிவில்தமிழில் கொண்டுவந்து இருக்கிறார்கள்இவர்கள். ‘போர்க் குரல்’ என்ற இந்தப்புத்தகம் தமிழில் முதல் முயற்சி.இத்தனை போராட்டத்துக்கு நடுவில்தமிழில் இராணுவத்தைப் பற்றியும்,போர் முறைகளைப் பற்றியும்விஞ்ஞானரீதியில் பல வால்யூம்களாகத்தயாரித்திருக்கிறார்கள்.பொதுவாக, பிரபாகரனுக்குப்புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அதிகம்.உலக நாடுகள் முழுவதிலிருந்தும் 3லட்சம் பெறுமான யுத்த நுணுக்கப் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு, ‘போர்க்குரலில்’ அவற்றின் மொழிபெயர்ப்புதரப்படுகிறது… போர்க் குரல் லே-அவுட்எல்லாம் பிரமாதம். இருப்பினும்பிரபாகரன் திருப்தி அடையவில்லை.
என்னைத் திருப்திபடுத்துவதுஎளிதான காரியம் அல்ல… இன்னும்சிறப்பாகத் தயாரித்திருக்க முடியும்என்று சிரித்தார் பிரபாகரன்.அவரது தமிழீழ விடுதலைப் புலிகள்இயக்கத்துக்கான ‘புலி’ முத்திரைக்குச்சரியான புலித் தலையைத்தேர்ந்தெடுக்கப் பட்டபாடு சுவையானது. சிவகாசி பட்டாசில் இருக்கும்புலியின் படத்தில் இருந்து உலகம்முழுவதும் வெளியாகும் புலிப்படங்கள் வரை பரிசீலனைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டன. எதிலும்அப்படி ஒரு ‘பெர்ஃபெக்ஷன்’எதிர்பார்க்கிறார் பிரபாகரன்.நாளைக்கு ஒரு புலியின் படத்தைப்பார்த்துவிட்டு, ‘அடடா, இதைஉபயோகித்திருக்கலாமே!’ என்றுவருத்தப்படக் கூடாதல்லவா? என்றுவிளக்கம் தந்தார். இந்த அணுகுமுறைஅவரது எல்லாச் செயல்களிலும்எதிரொலிக்கிறது.
எங்கள் இயக்கத்தில் சேருவதற்குக்கட்டுப்பாடுகள் உண்டு. வாழ்க்கையில்விரக்தி அடைந்தவர்கள் யாரும் இதில்சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை.தோல்வி உணர்வுகொண்டவர்களுக்குஇதில் இடம் இல்லை.அப்படிப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கைஇருக்காது. இந்தப் போராட்டவிஷயத்திலும் விரக்திதான்அடைவார்கள். தமிழ் ஈழம் உடனேகிடைத்துவிடும் என்ற கனவோடும் வரக்கூடாது. போராட்டத்துக்குக் காலவரம்பு கிடையாது. தனி ஈழம் கிடைக்கர்வதேச சூழ்நிலைகள்கூடஅனுசரணையாக இருக்க வேண்டியநிலை உண்டு. என்ற பிரபாகரன் சற்றுஉணர்ச்சி வசப்பட்டார்.
இலங்கையில் தமிழனாகப் பிறந்ததால்,வாழும் நிலம் பறிக்கப்பட்டது… கல்விபறிக்கப்பட்டது… பொருளாதார வசதிகள்மறுக்கப்பட்டன. இதை எதிர்த்துப்போராடாவிட்டால், நாம் ஒரு ஜடம்தான்.பிறகு, ஒரு மனிதனாக வாழ்வதில்அர்த்தம் ஏதும் இல்லை. நாங்கள்போராடுவதை எங்கள் சரித்திரக்கடமையாகக் கருதுகிறோம்.பதவிகளையோ அல்லது வேறுஎதையும் எதிர்பார்த்துப் போராட்டம்நடத்தவில்லை.சில நிமிடங்கள் அந்த ஹாலில் அமைதிநிலவியது… பேட்டி – ‘டெலோ’ –விடுதலைப் புலிகள் மோதலைப்பற்றிதிரும்பியது. நாங்கள் கேட்டோம்: இந்தமோதல்… சிறீ சபாரத்தினத்தின் மரணம்ஆகியவற்றால், தமிழ் மக்கள் கசப்படைந்துஇருக்கிறார்கள். தமிழர்களிடையேஒற்றுமை என்பதே இல்லையா? அந்தக்காலத்தில் சேர, சோழ, பாண்டியர்கள்என்று பிரிந்து மோதியதில் இருந்துஇந்த நிலைமைதானா?
சேர, சோழ, பாண்டியர்கள் என்றுபிரிந்து சண்டையிட்டதும் உண்மை. ஒருகால கட்டத்தில் சோழர்கள்… சேர,பாண்டியர்களை அடக்கியதும் உண்மைஎன்றார் பிரபாகரன் சுருக்கமாக. பிறகுதொடர்ந்தார்.எங்களிடம் வஞ்சகத்தன்மை இல்லை.இரண்டு எதிரிகளைச் சந்திக்கமுடியாது. முதலில் கத்திக்கொண்டுஇருந்தவர்களைக் கவனிக்க வேண்டியநேரம் வந்துவிட்டது. நிரம்பத்தள்ளிப்போட்டு எடுத்த முடிவுதான்அந்த மோதல். சிறிய யுத்தமாகவேநடத்தித் தீர்வு காணவேண்டியதாயிற்று. நாட்டைக் காக்கயுத்தத்தில் இறங்கும்போது,மெத்தனமாக முடிவெடுக்கமுடியாது. பகவத் கீதையும்அதைத்தான் சொல்கிறது. உற்றார்,உடன்பிறப்பு, குரு, நண்பன் என்று யுத்தகளத்தில் இரக்கம் பார்ப்பதற்கு இல்லை.
சொந்த தந்தை, சகோதரன் போன்றவர்கள்தரோகியாக மாறினால், அவர்களைஅழிக்கத் தயங்காதவர்கள் எங்கள்இயக்கத்தில் இருக்கிறார்கள்.அவர்கள் நிறையப் பொய்களைஅவிழ்த்துவிட்டவாறு இருந்தார்கள்…உண்மை செருப்பைமாட்டிக்கொள்வதற்குள்… பொய், பாதிஉலகம் உலா வந்திருக்கும் என்பதற்குஏற்ப, எங்களைப்பற்றிய பொய்ச் செய்திகள்பரப்பப்பட்டன. எனக்குப் பொதுவாகவேபிறரை விமரிசித்துஅறிக்கைவிடுவது பிடிக்காது…அவர்களுக்குப் பதில் சொல்லஆரம்பித்தால்… குழாயடிச் சண்டைபோல,அவலங்கள் வெளிவரும்!நாங்கள் அவர்கள் இயக்கத்தவரைஉயிரோடு கொளுத்தியதாகச்சொல்கிறார்கள். அப்படி எதுவும் என்இயக்கத்தில் நடக்காது. அது நினைத்துப்பார்க்கவே இயலாத செயல். அப்படியாராவது செய்தால், நான் பதிலுக்குஅவரை உயிரோடு கொளுத்துவேன்.
என் இயக்கத்தில் யாராவது தெரிந்துதவறு செய்தால், அவர்களை நான்மன்னிப்பதில்லை. ஆகவே இங்கேஇருப்பவர்களுக்குத் தவறு செய்யநிறையவே துணிச்சல் தேவைப்படும்!தமிழ்நாட்டு அரசியலில் சிலர், சிலரைதியாகி ஆக்குகிறார்கள். நான்கலைஞரைச் சந்திப்பது இல்லை என்றுகுற்றச்சாட்டு போலசொல்லப்படுகிறது. உண்மையில் நான்யாரையுமே சந்திப்பது இல்லை.எம்.ஜி.ஆரையும் நான் சந்திக்கவில்லை.இலங்கைத் தமிழருக்காக எம்.ஜி.ஆர்.உண்ணாவிரதம் இருந்தபோதுகூட நான்அங்கே போகவில்லை. எங்கும் நான்போவது இல்லை. எந்தப் பொதுநிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்வதுஇல்லை.தமிழீழம் சுதந்திரம் அடையும்விழாதான் நான் கலந்துகொள்ளும்முதல் பொது விழாவாக இருக்கும்.எங்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்தபிறகுதான், யாரையும் எங்கேயும் ந்திப்பேன்! என்கிறார் பிரபாகரன்அழுத்தம் திருத்தமாக.யாழ்ப்பாண மக்களிடம் விசாரியுங்கள்.
விடுதலைப் புலிகள் தவறுசெய்வதாகச் சொல்லட்டும்…மண்டியிடுகிறேன்… சொல்லமாட்டார்கள்! மற்ற இயக்கத்தவர்கள்செய்யும் தவறுகளை மக்கள் வந்துசொன்னதாலேயே, தடி எடுத்தவன்தண்டல்காரனாக ஆகக் கூடாதுஎன்பதாலேயே, ‘டெலோ’ மீதுநடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.பிரபாகரன் எதிரில் ஒரு மருந்து‘குப்பி’ இருந்தது. ”அது என்ன?” என்றுகேட்டோம்! இதில்தான் எனதுஇயக்கத்தவர்கள் சயனைட் நிரப்பி கழுத்தில்மாட்டிக்கொண்டு இருப்பார்கள்.எதிரிகளிடம் சிக்கினால், சயனைட்டைவாயில் போட்டுக்கொண்டு உயிர்த்தியாகம் செய்வார்கள். பலர் செய்தும்இருக்கிறார்கள்…” என்று சொல்லிவிட்டுஏதோ நினைவுகளில் மூழ்கினார்பிரபாகரன்…தமிழீழ விடுதலைப்புலிகள்இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள்கொரில்லா யுத்தத்தில்ஈடுபடும்போது சிங்கள இராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்டால், ஒரு சிறுதகவலைக்கூட அவர்களிடம் இருந்துகறந்துவிட முடியாது.காரணம், ஒவ்வொரு வீரரும் தன்கூடவேகொடிய விஷமான சயனைட் நிரப்பப்பட்டசிறு குப்பி ஒன்றைவைத்திருக்கிறார். தப்ப முடியாத,நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால்,உடனே அந்தக் குப்பியைக் கடித்துவிஷத்தை விழுங்கி உயிர்த் தியாகம்செய்துவிடுவார்கள்!
இப்படி சயனைடை விழுங்கி இறந்தவர்கள்மட்டுமே இதுவரை 30 பேர் இருக்கும்.இராணுவ மோதல்களில் உயிர்விட்டவர்கள்கணக்கு மிக மிக அதிகம்.அவர்களுடைய இயக்கப் புத்தகத்தில் இந்தஇளம் கொழுந்துகளின்புகைப்படங்களைப் பார்த்தபோது, நம்கைகள் நடுங்கின… உள்ளம் அழுதது.இந்த இழப்புகளை எல்லாம்தாங்கிக்கொண்டு தொடர்ந்துகடமையாற்றும் அந்த லட்சியவாதிகளைவர்ணிக்க வார்த்தைகளைத் தேடவேண்டும்.விடுதலை இயக்கத்தில் பிரபாகரன்சேர்ந்தது ஏன்? அதற்கு என்ன பின்னணி?பிரபாகரனே சொன்னார்..ஒரு நாள் என் அம்மாவிடம் ஒருபெண்மணி பேசிக்கொண்டு இருந்தார்.தனது மகள் திருமணத்துக்குப் பணம்திரட்டிக்கொண்டு இருந்தார் அந்தப்பெண்மணி என்பது புரிந்தது. அந்தப்பெண்மணியை உற்றுப் பார்த்தேன்.அவரது கால்கள் முழுவதும் நெருப்பில்எரிந்து கருகிக்கிடந்தது.
1958-ல் நடந்த இனக் கலவரத்தில் அவர்களதுகுடும்பம் நாசமாக்கப்பட்ட கதையைஅவர்கள் பேச்சில் இருந்து அறிந்தேன்.என் இதயத்தில் அழுத்தமாகப்பதிந்துவிட்டது அந்த நெருப்பில்கருகிய கால்கள். அப்பொதெல்லாம்தமிழர்கள் படுகொலை செய்யப்படும்செய்திகள் வரும்… கூடிக் கூடிப்பேசுவோம். பாணந்துறையில்குருக்களைக் கொலை செய்ததைப்பற்றிஊர் பீதியுடன் பேசியது… என் இதயத்தைஇச்செய்திகள் தாக்கிச்சின்னாபின்னமாக்கும்.நான் கடைக்குட்டி. வீட்டில்எல்லோருக்கும் செல்லப் பிள்ளை.வெளியே நடமாட விட மாட்டார்கள்.புத்தகம்தான் துணை. நெப்போலியன்,அலெக்ஸாந்தர். வீரசிவாஜி. நேதாஜிபோன்றவர்களின் வரலாறுகளைப்படித்தவாறு இருப்பேன். வெளியேஇருந்து என்னைத் தாக்கிய துயரச்செய்திகளும், இந்த வரலாறுகளைப்படிப்பதும் எனக்குள் மாற்றங்களைச்செய்தன.
வல்வெட்டித்துறையில் நிரந்தரஇராணுவ முகாம் உண்டு. கள்ளக்குடியேற்றம், கள்ளக் கடத்தல்ஆகியவற்றைத் தடுப்பது இந்த இராணுவமுகாமின் நோக்கம் ஆனால்.இராணுவத்தினர் அப்பாவிப்பொதுமக்களை அநாவசியமாகத்திடீரென்று தாக்குவார்கள்.பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும்என் உள்ளத்தில் கொதிப்பைஏற்படுத்தியது.எனது இளமைப் பருவத்தில் சத்தியசீலன்போன்றோர், ஈழத் தமிழர் நிலை பற்றிஎடுத்துரைக்க ஆரம்பித்து இருந்தனர்.இன்று மேற்கு ஜெர்மனியில் அகதியாகஇருக்கும் அவரைப் போன்றோர்தான்இம்மாதிரி இயக்கங்களின் முன்னோடி.தமிழ் ஈழம்தான் தமிழர் துயர் தீர ஒரேவழி என்ற கருத்துக்களைப் பள்ளிகளில்சில ஆசிரியர்கள் மெதுவாக எடுத்துச்சொல்வது உண்டு.”பிரபாகரனின் குடும்பத்தை இலங்கைஅரசு ‘ஒரு கை’ பார்க்காமலாஇருக்கும்? அவரது வீடு இடிக்கப்பட்டது.அப்பாவுக்கு பென்ஷன் மறுக்கப்பட்டது.நாடோடியாகத் திரிய வேண்டிய கதிஏற்பட்டது.
போராட்ட வாழ்வின் நடுவே பிரபாகரன்திருமணம் புரிந்தார். மனைவி பெயர்மதிவதனி. தன் ஒரே குழந்தைக்கு‘சார்ள்ஸ் அன்ரனி’ என்று பெயர்சூட்டியிருக்கிறார். இதற்கு ஒருகாரணம் உண்டு. பிரபாகரனின் உயிர்த்தோழராக சார்ள்ஸ் அன்ரனி என்பவர்இருந்தார். தமிழர்களுக்காகப் போராடியஅந்த வீரரை இலங்கை இராணுவம்சூழ்ந்து நின்று சுட்டு வீழ்த்தியது.பிரபாகரன் கோபம் கொண்டார்.அன்ரனியின் உடையை அணிந்து,கையில் துப்பாக்கியோடும், கண்களில்தீப்பொறியோடும் பாய்ந்து வெளியேசென்று இலங்கை இராணுவத்தைச்சேர்ந்த 13 பேரை அழித்துப்பழிவாங்கினார். அவர்நினைவாகத்தான் குழந்தைக்குப்பெயர்.பிரபாகரன் ‘கொரில்லா’ பயிற்சியைகியூபாவில் பெற்றதாகச் சொல்வார்கள்.அதைப் பற்றிக் கேட்டபோது. ”அப்படிப்பேசப்படுவது உண்மை அல்ல.புத்தகங்களைப் படித்து நானாகவேபயின்றேன். கற்பதன் மூலம்தெரிந்துகொள்வதைவிடசுற்றியிருக்கும் ‘ஆபத்து’ நமக்குஅதிகப் பயிற்சியைக் கொடுக்கும்.எனக்கு ‘ஆபத்து’தான் குரு…” என்றுசொல்லி சிரித்தார். சாதாரணதுப்பாக்கியில் இருந்து நவீனஆயுதங்களை இயக்குவது வரை கைதேர்ந்தவர்.பிரபாகரனுக்கு ஓவியம், கார்ட்டூன்வரைவதில் ஆசை உண்டு. இயற்கைக்காட்சிகளும் வரைவாராம்.
எங்கே, ஏதாவது படம் போடுங்களேன்…”என்று கேட்டோம்.ஸ்ரீலங்கா இராணுவத்தையே எதிர்த்துத்திணறவைக்கும் பிரபாகரன் சற்றுத்தயக்கத்துடன். ”நீங்கள் எதிரே இருப்பதால்,பயமாக இருக்கிறது” என்றார் மதனைப்பார்த்து!பிறகு சில படங்களைக் குட்டியாகப்போட்டுக் காண்பித்தார். எந்தப்படத்தையும் ‘நீட்டாக’முடித்துவிட்டுத்தான் தலையைநிமிர்த்தினார்.ஒரு காலில் நிற்கும் கொக்கும் படத்தைஒரு நிமிடம் எடுத்துக்கொண்டுபோட்டார்.இந்தப் படத்தில் ஒரு தவறு இருக்கிறது”என்றார் மதன். ”என்ன?” என்று ஆவலுடன்கேட்டார் பிரபாகரன். ”கொக்கின் கால்இப்படி உட்பக்கமாக மடங்காது” என்றார்மதன்.அப்படியா..?” என்று சிரித்த பிரபாகரன்,”எத்தனையோ பிரச்சினைகள்… இனிமேல்கரெக்டாகப் போடுவேன்…” என்றார் மதனபோட்ட திருத்தப் படத்தைப் பார்த்தவாறு.
விடைபெற வேண்டிய நேரம்வந்தபோது, தமிழ் ஈழம் பற்றி மீண்டும்பேச்சு திரும்பியது. ”தமிழ் ஈழம்பெறும் நாளை நெருங்கிக்கொண்டுஇருக்கிறோம். எங்களுக்குத்தேவையான உதவிகள் கிடைக்கும்என்றால், ஈழத்தை அடைவது பெரியவிஷயம் அல்ல” என்றார்.தன்னைச் சிலர், ‘இந்திய எதிரி’ என்றுவர்ணிப்பதைப்பற்றி குறிப்பிட்டு, அந்தக்குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்தார்பிரபாகரன்.
இந்திய இராணுவம் நடவடிக்கையில்இறங்குவதில் உள்ள சிரமம் எங்களுக்குப்புரிகிறது. அதனால், இந்தியாவைசர்வதேச நாடுகள் தவறாகப்புரிந்துகொள்ளக்கூடிய நிலைமைஏற்படலாம்.னி ஈழம் அமைக்க சம்மதித்தால் அதுதமிழ் இன நாடாக அமைந்து,இந்தியாவில் உள்ள தமிழ்நாடுபிரிவினை கோரும் கட்டம் வரலாம்என்று சில இந்தியத் தலைவர்கள் முன்புருதினார்கள்.தனி ஈழம், தமிழ்நாட்டுப்பிரிவினையைத் தூண்டிவிடும்என்பது அபத்தம். இந்தியா என்றமாபெரும் நாடு உலகத்துக்கேவழிகாட்டும் அற்புதமான நாடு.உலகமே வியக்கும் விதத்தில்இந்தியாவில் ஜனநாயக ஆட்சிநடக்கிறது. மக்கள் குரலுக்குத் தலைவணங்கும் ஆட்சி நடக்கிறது. உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பிரிவினை கோஷம் இனிஇந்தியாவில் எழுவதற்கே வாய்ப்புஇல்லை.
-ஜூனியர் விகடன்-
No comments:
Post a Comment