தமிழ் தேசிய கட்சியின் அங்கத்துவ கட்சிகளுக்கு இடையில் பிளவுகள் எவையும் ஏற்படவில்லை ஒன்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழரசு கட்சித் தவிர்ந்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகள் மாத்திரம், சர்வதேச யுத்தக்குற்ற தீர்ப்பாயத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி இருந்தது.
இலங்கை தமிரசு கட்சியும் சர்வதேச விசாரணையையே வலியுறுத்தி வருகின்ற நிலையில், குறித்த மூன்று கட்சிகள் மாத்திரம் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளமையானது, கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதை உணர்த்துகிறதா? என்று குறித்த வானொலியின் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில்வழங்கிய செல்வம் அடைக்கலநாதன், பிளவு ஏற்பட்டுள்ளதாக கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே கருத்தை வலியுறுத்தி விரைவில் கடிதம் ஒன்றை அனுப்பும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, குறித்த கட்சிகள் தனித்து கடிதம் அனுப்பியமை, தேசிய பட்டியல் தொடர்பில் தமிழரசு கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் வெளிப்பாடா? என்றும் அந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனையும் மறுத்த செல்வம் அடைக்கலநாதன், தேசிய பட்டியலுக்கும், இதற்கும் தொடர்புகள் இல்லை என்று கூறி இருந்தார்.

No comments:
Post a Comment