September 6, 2015

மருதங்கேணி பிரதேசசெயலகம் பா.உறுப்பினர் சி.சிறீதரன் சந்திப்பு!

யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரதேச செயலாளர் உள்ளிட்ட பணியாளர்களை மரியாதையின் நிமித்தம் கடந்த 4ம் திகதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
மருதங்கேணி பிரதேச செயலாளர் கனகேஸ்வரன் அண்மையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வடமராட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின அமைப்பாளர் சூரியகாந் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இங்கு பிரிதேச செயலக உத்தியோகத்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்து உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்
கடந்த தேர்தலில் எமது கட்சியை வெற்றிபெற பங்காற்றிய அனைவருக்கும் நன்றி.வடமராட்சி கிழக்கின் பல்வேறு தேவைகள் பிரச்சனைகள் அபிவிருத்திகள் தொடர்பில் தொடர்ந்து பணியாற்றிவரும் நீங்கள் கடந்த காலத்தில் சர்வாதிகாரத்தனமான ஆட்சியாளர்கள் மூலம் பல்வேறு இடர்களை எதிர்கொண்டிருக்கக்கூடும். ஆனால் தற்பொழுது நீங்கள் மக்களுக்க சுதந்திரமான பாரபட்சமற்ற சேவையை வழங்க முடியும் என நினைக்கின்றேன்.
எவ்வித அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் இன்றி சுதந்திரமாக அரசாங்க உத்தியோகத்தர்கள் பணி செய்யவேண்டும் என எண்ணுகின்றோம்.அரச பணியாளர்களும் மக்களுக்கு அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்கப்பாடுபடவேண்டும்.வடமராட்சி கிழக்கின் பல்வேறு தேவைகளை நீங்கள் தெரிவித்துள்ளீர்கள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட ஆவன செய்யப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment