September 5, 2015

வீணாகான வாத்திய பிருந்தா மற்றும் பயிற்சிப்பட்டறை!

நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு, இந்தியத் துணைத்தூதரகமானது, வடக்கு மாகாணசபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இந்தியக்
கலாச்சார உறவுகளுக்கான பேராயம் ஆகியவற்றின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் வீணாகான வாத்தியப்பிருந்தா மற்றும் பயிற்சிப்பட்டறைகளை செப்ரெம்பர் மாதம் 10 மற்றும் 11ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்த உள்ளது.
இந்திய பிரபல வீணை இசைக்கலைஞரான ஸ்ரீமதி ரேவதி கிருஷ்ணா அவர்களின் வீணாகான வாத்தியப் பிருந்தா நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை (10 செப்ரெம்பர்) நெல்லியடியிலும் வெள்ளிக்கிழமை (11 செப்ரெம்பர்) சங்கிலியன் தோப்பு நல்லூரிலும் நடைபெறவுள்ளது. வீணை இசைபற்றிய பயிற்சிப்பட்டறை ஒன்றும் வெள்ளிக்கிழமை (11 செப்ரெம்பர்) காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வீணாகான வாத்தியப்பிருந்தா மற்றும் பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அனுமதிகள் இலவசம்

No comments:

Post a Comment