September 5, 2015

முல்லைத்தீவில் சட்ட விரோதமாக கருங்கல் அகழ்வு!

முல்லைத்தீவில் பல இடங்களில் கருங்கல் அகழ்வு .முல்லைத்தீவு மாவட்டத்தில் பலபகுதிகளிலும் சட்ட விரோதமான முறையில் கருங்கல் அகளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.துணுக்காய் பிரதேசம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் தட்டயமலை முத்தையன்கட்டு வாவெட்டிமலை 14 ம்கட்டை உள்ளிட்ட பகுதிகளில் இவ் சட்டவிரேத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சூழல் பாதுகாப்ப சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறி சட்ட விரோதமாக இவ் அகழ்வு நடைபெற்று வருகின்றது;. நிர்ணயிக்கப்பட்ட ஆளத்தினை விட கூடுதலான ஆளத்திற்கு கருங்கல் தொண்டப்படுவதால் சூழ உள்ள பிரதேசங்களில் நிலத்தடி நிர் வற்றிப் போகின்றது வெடிவைத்து தகர்க்கப்படும் அதிர்வுகளால் கட்டடங்களில் விரிசல் ஏற்படுகின்றது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முத்தையன்கட்டு குளத்தினை அண்டிய பகுதியில் நடைபெறும் கருங்கல் அகழ்வினால் குளத்தின் நீர்தாங்கும் கற்பாறையில் சேதம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டுவரும் முறையற்ற கருங்கல் அகழ்வினை தடுப்பதற்கு அப்பிரதேசத்தை பிரநிதித்துவப்படுத்தம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் முன்வராதது கவலைக்குரியதே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment