September 20, 2015

மைத்திரி இம்மாத இறுதியில் அமெரிக்கா பயணம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை  மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்மாத இறுதியில் இப்பயணம் இடம்பெறலாமென ஜனாதிபதி செயலக தகவல்கள்
தெரிவிக்கின்றன. இம்மாதம் 30ம் திகதி நியுயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்திப்பார் என்றும் எனினும் அதுகுறித்த விடயங்கள் நம்பகரமானதாக அமையவில்லை என்பதுடன் அமெரிக்காவிற்கான இலங்கை ஊயஸ்தானிகராலயம் இந்த சந்திப்பு குறித்த  செய்திகளை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment