மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை(4) மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வஞ்சியன் குளம் கிராமத்தில் வயல் விழா இடம் பெற்றதோடு கட்கிடந்த குளம் கிராமத்தில்
மேற்கொள்ளப்பட்டுள்ள வீட்டுத் தோட்ட செய்கைகளும் பார்வையிடப்பட்டது.
மேற்கொள்ளப்பட்டுள்ள வீட்டுத் தோட்ட செய்கைகளும் பார்வையிடப்பட்டது.
மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த வயல் விழா நிகழ்வின் போது பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா,கௌரவ விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் பி.பற்றிக் நிரஞ்சன்,பிரதி விவசாய பணிப்பாளர் யோகேஸ்வரன்,வஞ்சியன் குளம் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானதிக்கம் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு மாற்று செய்கையை ஊக்குவிக்கும் வகையிலும் மன்னார் விவசாய திணைக்களத்தினால் வஞ்சியன் குளம் கிராமத்தில் பயிரிடப்பட்ட தானியங்களில் ஒன்றான பயறு அறுவடையை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா, ஆகியோர் இணைந்து இன்று(4) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.










No comments:
Post a Comment