சிறிலங்காவுக்கும், சிறிலங்காவின் அனைத்து மக்களுக்கும் விசுவாசமாக இருப்பதாக புதிய எதிர்கட்சித் தலைவராக தெரிவாகியுள்ள இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான அவரது முதலாவது உரையின் போது அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
தம்மைஎதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்தமைக்காக, நாடாளுமன்ற சபாநாயகருக்கும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் தம்மை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய வடக்கு கிழக்கு மக்களுக்கும், குறிப்பாக திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் சிறிலங்காவில் தீர்க்கப்பட வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.
அவற்றை தீர்ப்பதற்காக அரசாங்கத்துடனும், ஏனைய தரப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட விருப்பதாக கூறிய அவர் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிலைப்படுத்தவிருப்பதாகவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment