September 29, 2015

திருகோணமலை சம்பூரில் தற்காலிக கொட்டில்களுக்குள் உட்புகுந்த மழை நீர்!(படங்கள் இணைப்பு)

திருகோணமலை – சம்பூரில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட 134 குடும்பங்களுக்கு மலசலகூடம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கே. நாகேஸ்வரன் தெரிவித்தார்.

சம்பூரில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை(28) இரவு பெய்த அடை மழையால் அப்பகுதியில் மீள் குடியேறிய மக்களின் தற்காலிக கொட்டில்களுக்குள் மழை நீர்புகுந்துள்ளது.இதனால் பல்வேறு அசௌகரியங்களை அப்பகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டியேற்பட்டது.
தற்காலிக கொட்டில்கள் அமைக்கும் பணியை அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரதேச செயலகம் மூலமாக 140 பேருக்கு வழங்கியுள்ளன. அத்துடன் மலசல கூடம் அமைக்கும் பணியில் 134 குடும்பங்கள் உள்வாங்கப்பட்டுள்ள இந் நிலையில் இப்பணிகள் தற்போது முன்னெடுக்கபடுவதால் இவை அனைத்தும் இந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் நிலத்தடி நீர் உயர்ந்து விடும்.இதனால் மலசல கூட குழிகளை அமைப்பதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிவரும்.
எனவே இப்பணிகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கூறினார்.

No comments:

Post a Comment