September 29, 2015

யாழ். கல்லுண்டாயில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டுவரும் கழிவுகளினால் எதிர்வரும் பருவமழை காலத்தில் பல்வேறு விதமான தொற்றுநோய்களின் தாக்கத்திற்குள்ளாகும் அபாய நிலை உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்லுண்டாய் கழிவகற்றல் பகுதியை சீர் செய்தல் மற்றும் முறையான கழிவகற்றல் வசதிகளை செய்வதாக கூறிய வடமாகாண சபையின் சுகாதார அமைச்சு, சுற்றுச்சுழல் அமைச்சு மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியன இந்த விடயத்தில் தொடர்ந்தும் அசமந்தமாக உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம் அராலி வீதியில் உள்ள கல்லுண்டாய் பகுதியில் யாழ்.மாநகரசபை மற்றும் தனியார் மேலும் சில பிரதேச சபையினால் தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் குறித்த கழிவுகளை முறையாக தரம்பிரிக்கும் படியும், தனியார் முறையற்ற விதமாக, கழிவுகளை கொட்டுவதை நிறுத்துமாறும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக கழிவகற்றலை சீர் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்படும் என வடமாகாண சபையில் சுகாதார அமைச்சு, சுற்றுச்சுழல் அமைச்சு, உள்ளுராட்சி அமைச்சு ஆகியனவும் நடவடிக்கை எடுப்பதாகவும்,
முறையற்ற விதமாக தனியார் கழிவுகளை கொட்டுவதை தடுக்க பொலிஸ் ரோந்து நடவடிக்கை நடத்தப்படும் எனவும் வடமாகாண சபையில் அமைச்சுக்கள் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
அத்துடன், யாழ்.மா நகரசபையின் முன்னாள் ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், இந்தப் பகுதியில் கழிவுகளை தரம் பிரிப்பதற்கும், கழிவுகளை முறையாக கொட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,
குறித்த பகுதியிலிருந்து கழிவுகள் காற்று மற்றும் மழைகாலத்தில் தண்ணீர் மூலமாக கழிவுகள் அருகில் உள்ள ஊர்கள் மற்றும் வீதிக்கு வந்துவிடாமலிருக்க, பாரிய பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் எனவும்,
மலக் கழிவுகளை எரித்து அழிப்பதற்கும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எவ்விதமான நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தொற்றுநோய்கள் பல பரவுவதாக, மக்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருவதுடன், பருவமழை காலம் தொடங்கு ம் நிலையில் மீளவும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும்,
தங்கள் பகுதிகளில் இலையான் தொல்லை மற்றும் வயிற்றோட்டம் போன்ற பிரச்சினைகள் அதிகம் உள்ளதாக குற்றஞ்சாட்டும் மக்கள்,
வடமாகாண சபை இந்த விடயத்தில் எடுக்க வேண்டிய அத்தனை நடவடிக்கைகளிலும் கோட்டை விட்டிருக்கும் நிலையில், மீண்டும் தாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தவேண்டிய நிலையை தமக்கு உருவாக்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மற்றும் வடமாகாண சபையின் சுகாதார அமைச்சு, உள்ளூராட்சி அமைச்சு, மற்று ம் சுற்றுசுழல் அமைச்சு ஆகியன அசமந்தப் போக்கில் இருந்து கொண்டிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment