September 19, 2015

கிளிநொச்சிக்கு தொழிற்கல்வி அமைச்சர் ஏ9 வீதியில் ஜேர்மன் டெக் நிர்மான பணிகளை பார்வையிட்ட குழுவினர்(படங்கள் இணைப்பு)

தொழிற்கல்வி அமைச்சர் மகிந்த சமரசிங்க, ராஜாங்க அமைச்சர் பாலிதரங்கே பண்டார, அமைச்சின் செயலாளர் ரணேபுர, நைற்றா நிறுவன தலைவர் உளள்ளிட்டோர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நிர்மானிக்கப்பட்டுவரும் ஜேர்மன் டெக் நிர்மான பணிகளை பார்வையிட்ட குழுவினர், கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள நைட்டா தொழினுட்ப கல்லூரிக்கும் சென்று செயற்பாடுகளை பார்வையிட்டனர்.
வருகை தந்த குழுவினரை வரவேற்றதன் பின்னர், தொழினுட்ப கல்லூரியில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் கேட்டறிந்து கொண்டனர்.
நிறைவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க,
தனது கிளிநொச்சி பயணம் தொடர்பிலும், அடுத்த காலஙகளிற்ல் தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.
ஜெனிவா தீர்மானங்கள் தொடர்பில் கருத்து வினவிய ஊடகவியலாளர்களிற்கு பதிலளிக்கையில்,
சந்திரிக்கா தலைமையில் குழு அமைக்கப்படவுள்ளதாகவும், அக்குழுவில் ஐக்கியதேசிய கட்சியும், சுதந்திர கட்சியும் இணைந்து எடுக்கப்படும் தீர்மனங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.




No comments:

Post a Comment