வடக்கின் 5 மாவட்டங்களிலும் அதிகமானோர் சிறு நீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
வவுனியா மாவட்டத்தில் உள்ளதாக வட மாகாண சுகாரத் திணைக்களப் பணிப்பாளர் திருமதி யூட் தெரிவித்தார்.
வடக்கில் உள்ள 5 மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்திலேயே அதிகமானோர் சிறுநீரக நோய்த் தக்கத்திற்கான அறிகுறிகள் இடம் காணப்பட்டுள்ளதுடன் உறுதி செய்யப்பட்டவர்வளின் எண்ணிக்கையிலும் வவுனியா மாவட்டத்திலேயே அதிகமானோர் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 855 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளபோதிலும் ஆயிரத்து 933 பேருக்கு சிறுநீரகம் பாதித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 432 பேருக்கு சிறுநீரகம் பாதித்துள்ளதுடன் மூன்றாவது மாவட்டமாக யழ்ப்பாணத்தில் 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 77 பேரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் மிக்க குறைந்தளவானோர் சிறுநீரகம் பாதித்த மாவட்டமாக மன்னார் மாவட்டம் உள்ளது. இங்கே 29 பேரின் சிறுநீரகங்களே பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் 2015ம் ஆண்டின் தகவலின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்டவை.
இவ்வாறு சிறுநீரகம் அதிகம் பாதித்த மாவட்ட அதிகாரிகளிற்கான விசேட சந்திப்பு நேற்றைய தினம்
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலுக்காக வடக்கின் 5 மாவட்டங்களிலும் அதிகம் சிறுநீரகப் பாதிப்பை எதிர் கொள்ளும் மாவட்டங்களான முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர்களின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.என்றார்.

No comments:
Post a Comment