இலங்கைக்கு அனுப்புவதற்காக, டீசலில் இயக்கப்படும், 20 ரயில்கள், சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்படுகிறது.
ரயில்வே துறையின் கீழ் வரும், 17 மண்டலங்களுக்கும் தேவையான, ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி, சென்னை, ஐ.சி.எப்.,பில் நடக்கிறது. மின்சார ரயில், டீசல் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தயாரித்து வந்த, ஐ.சி.எப்., அடுத்தகட்ட முயற்சியாக, ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய, ‘எல்.எச்.பி.,’ வகை ரயில் பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கிடையே, இலங்கை நாட்டுக்காக, ரயில் பெட்டிகளை தயாரிக்க உள்ளது.
இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:இலங்கை அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, 20 டீசல் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ரயிலும், ஆறு பெட்டிகள் கொண்டது. அனைத்தும் இருக்கை வசதிகள் கொண்ட பெட்டியாக இருக்கும்.
இந்தாண்டு இறுதியில் பணியை தொடக்க உள்ளோம்.ஏற்கனவே, இலங்கைக்கு தேவையான ரயில்கள் தயாரித்து வழங்கிய அனுபவம் இருப்பதால், தயாரிப்பு பணியில் எந்த சிக்கலும் இருக்காது.டீசல் ரயிலை பொறுத்தவரை, டீசல் மூலம் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் மின்சாரம் மூலம் ரயில் இயக்கப்படும். இந்த வகை ரயிலை தான், டீசல் ரயில் என, அழைக்கின்றனர்.

No comments:
Post a Comment