மோடி பிரதமர் பதவி ஏற்பு விழாவில் இனப்படுகொலையாளன் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மே 25 ஆம் நாள் போராட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மே 17 இயக்கத்தின் சார்பில் வரும் 25 ஆம் நாளன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இந்திய மோடி அரசே, இனப்படுகொலையாளன் ராஜபக்சவினை அழைக்காதே, இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காதே" எனும் முழக்கத்துடன் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும் "இந்திய அரசுக்கு நம் எதிர்ப்பினை பதிவு செய்ய அழைக்கிறோம். அனைவரும் திரளுவோம்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டசபையில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிற நிலையில் அவரை பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பது ஏன்? என்றும் தமிழர் அமைப்புகள் கேள்விகள் எழுப்பியுள்ளன.

No comments:
Post a Comment