May 22, 2014

அம்பலத்டதிற்கு வரும் சயந்தனின் திருவிளையாடல்கள்! சீற்றத்தினில் சக கூட்டமைப்பு உறுப்பினர்கள்!

வடமாகாணசபையினில் இன்று பொதுச்சுடரேற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதை தடுப்பதினில் கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர் சயந்தனே முக்கிய குழப்பங்களை ஏற்படுத்தியதாக
ஏனைய உறுப்பினர்கள் கடுமையான சீற்றத்தினை வெளியிட்டுள்ளனர். சட்டத்தரணியான குறித்த நபர் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கள் ஏதும் வெளியிடப்பட்டால் அரசு பக்கம் தாவலாமென அவரது கட்சி சார்ந்த தரப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

சட்டத்தரணியான குறித்த நபர் கொழும்பினை மையமாக கொண்டு பணியாற்றி வருகின்றார்.கடந்த மாகாணசபை தேர்தலில் அங்கிருந்தே கொழும்பு சிபார்சினில் தேர்தல் களத்தினில் குதித்திருந்ததுடன் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தினிலேயே வெற்றியும் பெற்றிருந்தார்.

முன்னதாக கூட்டமைப்பின் மேதினத்தை சாவகச்சேரியினில் நடத்தியமை மற்றும் அங்கு தலைவர் பிரபாகரனை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விமர்சித்த விடயத்திலும் குறித்த சயந்தனே பின்னாலிருந்தமை அம்பலமாகியுள்ளது.இன்றைய தினம் காலை இடம்பெற்ற நினைவேந்தல் சுடரேற்றலிலும் முதலமைச்சர் மற்றும் பேரவை தலைவர் ஆகியோருடன் அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் பங்கெடுக்காது விட்டிருக்க இவரே காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

நினைவேந்தலில் சுடரேற்ற தயார் ஆகுவது பற்றி தகவல்களை தொலைபேசியினூடாக வழங்கி அவர்களை பேரவைக்கு தாமதமாக வருகை தர இவரே அறிவுறுத்தியதாக தெரியவருகின்றது.இதையடுத்தே சுடரேற்றல் முடிவுற்றதும் அவர்கள் சபைக்கு வருகை தந்துள்ளனர்.நேற்றை கூட்டத்திலும் கறுப்பு பட்டி மட்டுமே அணிய முடியுமென தெரிவித்து ஏனையவர்களுடன் இவர் வாக்குவாதத்தினில் ஈடுபட்டமையினை உறுப்பினரான விந்தன் கூட்டிக்காட்டினார்.முன்னதாக நேற்று இடம்பெற்ற ஒத்திகைக்கூட்டத்திலும் குறித்த நபர் கடந்த 16ம திகதி முன்னெடுக்கப்பட்ட சுடரேற்றல் நிகழ்வினை நையாண்டி செய்திருந்ததாக மற்றொரு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் வேதனையுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment