தமிழீழ இனப்படுகொலையை மறைத்து, கொலைகார இலங்கை அரசையே நீதிபதியாக்கி,
தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கும் அமெரிக்கத் தூதரக முற்றுகை அனைத்து
கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் வரும் செப்டம்பர் 28, திங்கள் கிழமை
காலை 10 மணியளவில் நடைபெற இருக்கிறது. அதற்கான
பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று(25-9-2015) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
தனது பிராந்திய நலன் என்ற ஒற்றை நோக்கத்திற்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை இனப்படுகொலை செய்ய இலங்கையோடு 2009ல் துணை நின்றது அமெரிக்கா. அதே அமெரிக்கா கடந்த மூன்று வருடங்களாக ஐநாவின் நடைமுறையின் படி இலங்கை அரசின் மீது நடைபெற்றிருக்க வேண்டிய சர்வதேச விசாரணையை தடுக்கும் விதமாக ஐநா அவையில் தொடர்ச்சியாக தீர்மானங்களை கொண்டு வந்தது.
இந்நிலையில் இலங்கையில் அமெரிக்காவுக்கு சாதகமான சிறிசேனா-இரணில் ஆட்சி அமைந்தவுடன் ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையை முற்று முழுவதுமாக அழிக்கும் வேலையை தற்போது அமெரிக்கா செய்துவருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டிருக்கவேண்டிய ஐநா விசாரணை அறிக்கையை தள்ளி வைக்க
ஐநா அவைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது அமெரிக்கா. அதன்பின் இலங்கையில்
தற்போது நல்லாட்சி நடைபெறுவதால் உள்நாட்டு விசாரணையை இலங்கை
தொடங்கவேண்டுமென்றும், அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென்றும் சொல்லி
நாண்காவது ஆண்டாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநாவின் 30வது மனித
உரிமை கூட்டத் தொடரில் கடந்த 18.09.2015 அன்று தனது முதல் வரைவு
தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறது.
அதில் இலங்கையில் நல்லிணக்கம் திரும்பிவிட்டது எனவும், உள்கட்டமைப்பு வசதிகள் சரியான விதத்தில் ஏற்பட்டிருக்கிறதென்றும், உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டனர் என்றும் பல்வேறு பொய்களை சொல்லி அதனால் உள்நாட்டு விசாரணையை இலங்கை அரசு நடத்தவேண்டுமென்று கூறியிருக்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்த செயலானது கடந்த 16.09.2015 அன்று ஐநாவின் மனித உரிமை அணையத்தினால் இலங்கையின் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளில் இருந்து இலங்கையை காப்பாற்றும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனையும் கூட இறுதி வரைவு திர்மானத்தில் மாற்றி சர்வதேச மட்டத்தில் இலங்கையை முழுவதும் காப்பாற்றிடவும், அதே நேரத்தில் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை முற்றும் முழுவதுமாக அழித்துவிடவும் அமெரிக்கா முனைந்திருக்கிறது.
பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று(25-9-2015) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
தனது பிராந்திய நலன் என்ற ஒற்றை நோக்கத்திற்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை இனப்படுகொலை செய்ய இலங்கையோடு 2009ல் துணை நின்றது அமெரிக்கா. அதே அமெரிக்கா கடந்த மூன்று வருடங்களாக ஐநாவின் நடைமுறையின் படி இலங்கை அரசின் மீது நடைபெற்றிருக்க வேண்டிய சர்வதேச விசாரணையை தடுக்கும் விதமாக ஐநா அவையில் தொடர்ச்சியாக தீர்மானங்களை கொண்டு வந்தது.
இந்நிலையில் இலங்கையில் அமெரிக்காவுக்கு சாதகமான சிறிசேனா-இரணில் ஆட்சி அமைந்தவுடன் ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையை முற்று முழுவதுமாக அழிக்கும் வேலையை தற்போது அமெரிக்கா செய்துவருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டிருக்கவேண்டிய
அதில் இலங்கையில் நல்லிணக்கம் திரும்பிவிட்டது எனவும், உள்கட்டமைப்பு வசதிகள் சரியான விதத்தில் ஏற்பட்டிருக்கிறதென்றும், உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டனர் என்றும் பல்வேறு பொய்களை சொல்லி அதனால் உள்நாட்டு விசாரணையை இலங்கை அரசு நடத்தவேண்டுமென்று கூறியிருக்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்த செயலானது கடந்த 16.09.2015 அன்று ஐநாவின் மனித உரிமை அணையத்தினால் இலங்கையின் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளில் இருந்து இலங்கையை காப்பாற்றும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனையும் கூட இறுதி வரைவு திர்மானத்தில் மாற்றி சர்வதேச மட்டத்தில் இலங்கையை முழுவதும் காப்பாற்றிடவும், அதே நேரத்தில் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை முற்றும் முழுவதுமாக அழித்துவிடவும் அமெரிக்கா முனைந்திருக்கிறது.
அமெரிக்காவின்
இந்த செயலை கண்டித்து வரும் 28.09.2015 திங்கள்கிழமையன்று காலை 10மணிக்கு
எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்திலிருந்து சென்னையிலுள்ள அமெரிக்க துணை
தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அனைத்து கட்சிகள், இயக்கங்கள்
மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இணைந்து நடத்துகிறார்கள்.
கோரிக்கைகள் :
1.தமிழர்கள் நாங்கள் அமெரிக்கா சொல்லும் உள்நாட்டு பொறி முறையையோ, அல்லது ஐநா சொல்லும் உள்நாட்டு பொறி முறையின் இன்னொரு வடிவமான கலப்பு பொறிமுறையையோ ஏற்றுக்கொள்ளவில்லை.
2.ஐ.நாவே!
1948 முதல் தற்போது வரை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும்,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பையும் உடனே நடத்து.
கலந்து கொள்ளும் கட்சிகள் மற்றும் அமைப்புகள்.
1.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக)
2.தமிழர் தேசிய முன்னனி
3.தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (த.மு.மு.க)
4.சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)
5.விடுதலை சிறுத்தைகள் கட்சி
6.தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
7.தந்தை பெரியார் திராவிடர் கழகம்
8.தமிழ்தேசிய பேரியக்கம்
9.தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
10.திராவிடர் விடுதலை கழகம்
11.புரட்சிகர இளைஞர் முன்னணி
12.தமிழர் விடுதலை கழகம்
13.தமிழர் விடியல் கட்சி
14.தமிழ்புலிகள் கட்சி
15.விடுதலை தமிழ்புலிகள் கட்சி
16.காஞ்சி மக்கள் மன்றம்
17.வழக்கறிஞர் கயல் (எ) அங்கயற்கண்ணி
18.அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
19.தமிழ்தேசக் குடியரசு இயக்கம்
20.மக்கள் விடுதலை இயக்கம்
21.மறுமலர்ச்சி நாம் தமிழர் கட்சி
22.தமிழர் நலன் இயக்கம்
23.மக்கள் நலன் இயக்கம்
24.இளைய தலைமுறை கட்சி
25.தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
26.தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு
27.மாற்றம்- இளையோர் மாணவர் இயக்கம்
28.பாலசந்திரன் மாணவர் இயக்கம்
29.மே 17 இயக்கம்

No comments:
Post a Comment