தமிழினப் படு கொலைக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம், 18வது நாளான இன்றைய தினம் (17.09.2015) சுவிஸ் Basal என்ற இடத்தை வந்தடைந்தது. சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் மனிதநேய செயற்பாட்டாளர்களை வரவேற்றனர்.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சுவிஸ் நாட்டின் Basel நகரில் வைத்து மனிதநேய ஈருருளிப் பயணத்தை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் கையளித்தனர்
தமிழின அழிப்புக்கு உலகளாவிய ரீதியில் தமிழர்கள் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி நிற்கும் வேளையில் நடைபெறவிருக்கும் ஐநா மனிதவுரிமை அமர்வை கருத்தில் கொண்டு இவ் நீதிக்கான பயணம் அமைகின்றது .
நடைபெறும் ஈருருளிப் பயணம் பின்வரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஐநா நோக்கி செல்கின்றது. இப் பயணம் எதிர்வரும் 21.09 அன்று ஐநாவில் நடைபெறும் மாபெரும் பேரணில் சங்கமித்து தமிழீழ மக்களின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
1. பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டு எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெற உழைத்திடுவோம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
.
No comments:
Post a Comment