August 30, 2015

இரண்டாவது முறையாக மைத்திரி- மஹிந்த-ரணில் ஒரே நிகழ்வில்!

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார காலம் முழுவதும் விசேடமாக மஹிந்த ராஜபக்சவும் ரணில் விக்ரமசிங்கவும் ஆளுக்காள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதன் போது இடைநிலையாக இருந்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாகும். 
அவர்கள் அரசியல் மேடைகளினுள் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் நாட்டு மக்கள் மனதில் அவர்களுக்கு இடையில் ஜென்ம பகைமை என சிந்தித்துள்ளனர்.
இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த காலம் முழுவதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நூல் அளவேனும் ஆதரவு வழங்கவில்லை.
எனினும் வாழ் நாள் எதிரிகள் மற்றும் நண்பர்கள் என யாரும் இல்லை என்பதனை போன்று தேர்தலின் பின்னர் இரண்டாவது முறையாக ரணில், மஹிந்த மற்றும் மைத்திரி, முன்னாள் பிரதி அமைச்சர் எரிக் பிரசன்ன வீரவர்தனவின் திருமண வைபவத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இம்மூன்று தலைவர்களும் மிகவும் நட்புடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment