August 30, 2015

அனைத்துலக காணாமற்போனோர் நாள் - தமிழ் இளையோர்அமைப்பு - யேர்மனி!

அனைத்துலக காணாமற்போனோர் நாளானது உலகளாவியரீதியில் ஆண்டுதோறும் ஆவணிமாதம் 30ம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. காணாமல் போனோர் என்பது ஒரு நாட்டினதோ ஒரு 

 கண்டத்தினதோ இன்றி முழு உலகத்தையும் வாட்டும் பிரச்சனையாக உள்ளது. 

மனிதாபிமானம் சார்ந்து எத்தனையோ மனிதநேய அமைப்புக்கள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சனைக்குத் தீர்வூகானமுடியாதுள்ளது. 

உலகளவில் ஆதிக்கசக்திகளிடம் உறவுகளை பறிகொடுத்தோர்களுக்காய் வையகரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்நாளாக ஆவணி 30 அனைத்துலக காணாமற்போனோர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள நாடான கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட  கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (FederationofAssociationsfor Relatives oftheDetained-Disappeared, FEDEFAM) என்ற அரசசார்பற்ற அமைப்பே  முதன்முதலில் லத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படுவதை எதிர்த்துகுரலெழுப்பியது.

காணாமல் போனோர் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் போது யுத்தங்கள் மாத்திரமன்றி பாலியல் நோக்கத்திற்காகவும், விற்பனை நோக்கத்திற்காகவும் சிறுவர்கள் இளம் பெண்களைக்கடத்தல், பழிவாங்கும் நோக்கத்துடன் கடத்தல், கப்பம் பெறும் நோக்கத்துடன் கடத்தல்,  உடல் உறுப்புக்களைத் திருடும் நோக்கத்துடன் கடத்தல் எனபல நோக்கங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

முதலாம் உலக போரின் காலத்திலும் இரண்டாம் உலகபோரின்காலத்திலும் மில்லியன் கணக்கானோர் காணாமல்போயுள்ளனர். இரண்டாம் உலக போரின்காலத்தில் கிட்லரின் கொடூர நடவடிக்கையின்கரணமாக 10 லட்சத்துக்கு அதிகமான யூத இனத்தவர் மாத்திரம் காணாமல் போயுள்ளார்கள்.

20ம்நூற்றாண்டின் காலக்கட்டத்தில் காணாமற்போனோர் வரலாற்றில் முன்னைய காலங்களை விட அதிகமாகக் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

முக்கியமாக ஆசிய நாடுகளானசிறிலங்கா, இந்தியா, தாய்லாந்து, மியன்மார், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் சட்டவிரோத கைதுகள் கடத்தல்கள் காணாமல் போதல் என்பன பெரும் பிரச்சனையாகவே உள்ளது. அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்புசபை,  மனித உரிமைமீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கியநாடுகளின் சர்வதேச அமைப்பான மனித உரிமைகளுக்கான ஐக்கியநாடுகள் அமைப்பு மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்பான சர்வதேசசெஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் என்பன காணாமல் போனோருக்காக அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்றன.

இலங்கையிலும் கடந்த 30 ஆண்டு கால போர்காலங்களில் சிறிலங்காஅரசானதுதனக்கு எதிராக  செயற்படுவோர்களை கடத்திகாணாமல் போகடிக்கச்செய்தது. இதில் பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், தமிழ்மக்களின் உரிமைகளுக்காக போராடியவர்கள் என அனைவரும்அடங்குவார். இதுஅனைத்தையும் வெள்ளைவான் மூலம் செயற்படுத்திவந்தனர். 

இறுதி யுத்தத்தின் போதும் ஆயிரக்கணக்கானோர்காணாமல் போயுள்ளார்கள். 2009ம் ஆண்டு நடைபெற்ற இனவழிப்புபோரின் போதுமட்டும் 146679 பேருக்கு என்ன நடந்தது எனமதிப்புக்குறிய மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்புயோசப் ஆண்டகைஅவர்கள் அனைத்துலக சமூகத்தை நோக்கி கேள்வியெழுப்பிவருகிறார்.  2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட காணாமல் போனோர்  நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா அரசு இரண்டாம் இடத்தை வகித்தது இது தமிழ் மக்களுக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் அநீதிகளை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

பல ஆண்டுகளாகியும் தமது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் கதறி அழும் உறவுகள் தான்எத்தனை? எத்தனை? தம் உறவுகளை இழந்துதவிக்கும் தவிப்பை உறவுகளை இழந்தவர்களால் தான் உணரமுடியூம். 2009 ல்இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்காலில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போனதனது சகோதரனைத்தேடி செல்வி விபூசிகாவும் தாயும் எத்தனையோ இன்னல்களை அனுபவிப்பதை ஊடகங்கள் மூலமாகநாம் அறிவோம். 

காணாமல் போவோரை தேடுவோரும் காணாமல் போவதும் இலங்கையில் சர்வ சாதாரணமாகிவிட்டது.
காணாமல் போனவர் ஓர் குடும்பத்தலைவர்  ஆயின் அக்குடும்பத்தின் பாதிப்பை நினைவில் கொண்டு இத்தகைய குடும்பங்கள் மீது கவணம் செலுத்துவது எம்தலையான கடமையாகும். 

மனிதாபிமானம் இன்றி மக்கள் கடத்தப்பட்டாலும் நாம்மனிதபிமானத்துடன் செயல்படுவோம். காணாமல்போனோர் பட்டியல் தொடராது இருக்க எம்மாலான பணிகளைச் செய்வோம். காணமல் போகடிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகவும், அவர்களுக்காக போராடும் உறவினர்களுக்கு ஆதரவாக நிற்பதோடு, அவர்களுக்கான நீதியை பெறும் வரை சர்வதேச சமுகத்திடம் தொடர்ந்தும் குரலெழுப்புவோம் என தமிழ்இளையோர் அமைப்பு யேர்மனிஉறுதியளித்துக்கொள்கிறது.

நன்றி
தமிழ்இளையோர்அமைப்பு–யேர்மனி
தமிழரின்தாகம்தமிழீழத்தாயகம்

No comments:

Post a Comment