இலங்கை சனத்தொகையில் தினமும் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சனத் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு தொடர்பில் திணைக்களம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை வருடந்தோறும் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, 2011 ஆம் ஆண்டை விட 2014 ஆம் ஆண்டில், 4 ஆயிரத்து 497 மரணங்கள் சம்பவித்துள்ளன.
2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இறந்தவர்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு 52 ஆயிரத்து 561 பெண்கள் இறந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு 56 ஆயிரத்து 384 பெண்கள் இறந்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இறந்த பெண்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது. எனினும் இந்த நான்கு ஆண்டுகளில் இறந்த ஆண்களின் எண்ணிக்கை 664 ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.
No comments:
Post a Comment