August 30, 2015

33 வருடங்களுக்குப் பின்னர் குருந்தூர் மலை சிவன் ஆலயத்திற்கு சென்ற மக்கள் உணர்வுபூர்வமான வழிபாடு!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணி முறிப்பு பகுதியில் கடந்த 1982ம் ஆண்டு தொடக்கம் வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த குருந்தூர் மலையில் உள்ள சிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் மக்கள் உணர்வுபூர்வமாகவும்,
பக்தி பூர்வமாகவும் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த ஆலயத்தை பாதுகாத்து கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குமழ முனை கிராமத்தை அடுத்ததாக மிகப்பெரும் வனப்பகுதியை ஒட்டியதாக இருந்த கிராமம் தண்ணி முறிப்பு கிராமம்.
குறித்த மக்கள் இறுதியாக யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்ததன் பின்னர் அந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் இன்னமும் மீள்குடியேற்ற,
அனுமதிக்காத நிலையில், மக்கள் தற்போதும் மாற்று இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மக்களுடைய வழிபாட்டு இடமாகவும், முல்லைத்தீவு- தண்ணி முறிப்பு பகுதியில் தமிழ் மக் களின் இருப்பை தக்கவைப்பதற்கான களமாகவும் மேற்படி குருந்தூர் மலை சிவன் ஆலயம் அi மந்திருந்த நிலையில் கடந்த 1982ம் ஆண்டின் பின்னர் குறித்த ஆலயத்திற்கு,
செல்வதற்கும், வழிபாடுகளை நடத்துவதற்கும் முழுமையான தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நி லையில் இன்றைய தினம் மக்கள் ஆலயத்தில் பொங்கல் வைத்து பூசை வழிபாடுகளை செய்வத ற்காக சென்றிருந்தனர். குhலை 10 மணிக்கு குமுழுமுனை தலைவெட்டி பிள்ளையார் ஆலயத்தி லிருந்து குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்றிருந்தனர்.
இதன்போது மக்களுடன் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாணச பை உறுப்பினர் சிவநேசன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். குறித்த குருந்தூர் மலை முழு மையாக வனப்பகுதியாகும். அந்த வனப்பகுதிக்குள் மிகுந்த சிரமத்திற்கும் மத்தியில் நுழைந்த மக்கள் ஆலயம் இருக்கும் இடத்தை தேடிக் கண்டு பிடித்து,
பூசை வழிபாடுகளை மிகவும் உணர்வுபூர்வமாக செய்திருந்ததை காண முடிந்தது. குறித்த பகுதி யில் 1982ம் ஆண்டு காலப்பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வந்து தங்கியிருந்ததுடன் குறித்த மலையில் ஒரு விகாரையினை அமைப்பதற்கும் முயற்சித்திருந்தார். இந்நிலையில் குறித்த பிக்கு வை அங்கிருந்து அகற்றுவதற்கும் தமிழ் மக்களுடைய பூர்வீக நிலத்தில்,
சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்குமாக 1982ம் ஆண்டே மக்கள் கடுமையான போராட்டங்கள் நடத்தியதுடன் அப்போது மெல்ல மெல்ல ஆரம்பமாகிக் கொண்டிருந்த ஆயுதப்போராட்ட அமைப்புக்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பினை காட்டி உருவாக்கப்பட்டதே இந்த குருந்தூர் மலை சிவன் ஆலயம் என மக்கள் கூறுகின்றனர்.
குறித்த ஆலயம் அமைந்திருந்த பகுதி முன்னர் தமிழ் மன்னர் ஒருவரின் இராசதானி இருந்த இட மாகும் அந்த இடத்தில் ஒரு அரண்மனை அமைந்திருந்தமைக்கான எச்சங்கள் இன்றளவும் காண ப்படுகின்றது. தமிழர்களின் வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்படவேண்டிய இந்த இடம் பாது காக்கப்படாமல் திட்டமிட்டு சிலரால் இங்கிருந்த வரலாற்று ஆவணங்கள்,
திருடப்பட்டுள்ளதுடன், புதையல் தோண்டும் கும்பல் இந்த அரண்மனையின் வாசலில் பாரிய குழி ஒன்றை தோண்டி புதையல் தேடியுள்ளமையினையும் காண முடிகின்றது. இந்நிலையில் திட்டமிட்ட வரலாற்று ஆவண அழிப்பிலிருந்து தமது வரலாற்று பொக்கிஷத்தை மீட்டுக் கொடுக்குமாறு கேட் டிருக்கும் மக்கள், தாங்கள் உணர்வுபூர்வமாக வழிபாடு நடத்தும்,
ஆலயத்தை மீட்டுக் கொடுங்கள் எனவும், தண்ணிமுறிப்பு பகுதியில் தங்களை மீள்குடியேற்றுமாறு ம் மக்கள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை குறித்த தண்ணிமுறிப்பு கிராமத்தில் மக்கள் பல பரம்பரைகளாக வாழ்ந்தபோதும் அடிப்படை விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் தங்கள் காணிகளுக்கான,
ஆவணங்களையோ, ஆதாரங்களையோ வைத்திருக்காத நிலையில் ஆவணங்கள் இல்லை. என்பதற்காக மீள்குடியேற விடாமல் திட்டமிட்டு தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.

No comments:

Post a Comment