சர்வதேச விசாரணையை கோரி காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்கம், வட கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியன இணைந்து குறித்த தினத்தை அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்திருந்தது.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி. செபமாலை அடிகளாரின் தலைமையில் நடைபெற நிகழ்வில் காணாமல்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தபட்டது.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய மண்டபத்தில் நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தபோதும் தவிர்க்கமுடியாத காரணத்தால் தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள டிலாசால் கிட்ஸ் கெம்பஸ் (பாடசாலையில்) காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை குறிந்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வு ஆரம்பித்ததை தொடர்ந்து, மன்னார் பிரஜைகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் காட்டபட்டபோது தமது உறவுகளை இழந்த பெண்கள், தாய்மார்கள் தமது கவலையினை அடக்கி கொள்ள முடியாமல் ஒப்பரி வைத்து அழத்தொடங்கியதால் சிறிது நேரம் நிகழ்வினை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு பின் அது நிவர்த்தி செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினரான அருட்பணி. இராஜேந்திரம் (இயேசு சபை அகதிப் பணியின் இலங்கைக்கான பிரதிநிதி, தமிழ் சிவில் சமூக அமைப்பின் இணைப் போச்சாளர், பகுதிநேர விரிவுரையாளர் கிழக்கு பல்கலைகழகம், திருகோணமலை கல்வியகம்) பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன்,
வடமாகாண சபை உறுப்பினர் அந்தோனி பிறிமுஸ் சிராய்வா, அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் செயலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் அதன் உத்தியோகஸ்தர்கள் மார்ட்டின் மாஸ்டர், அ.சாகாயம் உள்ளிட்ட நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் காணாமல் ஆக்கபட்டுள்ள குடும்பங்களின் பாடசாலை மாணவ மாவணிகளின் தற்போதைய மனநிலையை பிரதிபலிக்கும்வகையில் நடைபெற்ற சித்திர போட்டிகளில் பங்குபற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
காணாமல்போன உறவுகளின் உள்ளத்தின் வேதனைகளை வெளிப்படுத்தும் வகையிலான நாடகம் அங்கு அரங்கேற்றபட்டிருந்தது.
வட கிழக்கு மாகாணங்களில் உள்ள காணமால் ஆக்கபட்டவர்களின் உறவுகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நிகழ்வு காலையில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தபோது அதிக எண்ணிக்கையிலான இராணுவ, பொலிஸ் உளவாளிகள் நிகழ்வு நடைபெறும் பகுதியில் புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment